WhatsApp செயலியில் மெசேஜ்களை ஆட்டோமெட்டிக்காக டெலிட் செய்யும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேவையான மெசேஜை அப்படியே வைத்திருக்கும் வகையில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் கடந்த சில மாதங்களாக பல புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு ஆட்டோமெட்டிக்காக மெசேஜ்களை டெலிட் ஆகும் வகையிலான disappearing messages என்ற அம்சம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் மெசேஜ்களை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு ஆட்டோமெட்டிக்காக அவை டெலிட் செய்திருடும் வகையில் செட் செய்து கொள்ளலாம். சில நேரங்களில் மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கும் போது, சில மெசேஜ்கள் முக்கியமாக தோன்றும். disappearing messages ஆப்ஷனில் இருக்கும் போது அத்தகைய மெசேஜ்களும் டெலிட் ஆகிவிடும்.
இந்த நிலையில், முக்கியமான மெசேஜ்களை மட்டும் அப்படியே வைத்திருக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் “Kept” என்ற ஆப்ஷன் மெசேஜ் செய்யுமிடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் செயலியில் ஆட்டோ டெலிட் ஆகும் மெசேஜ்களை சேமிக்கலாம். வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது இன்னும் பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
பீட்டா சோதனையாளர்களுக்காக இந்த அம்சம் வெளியிடப்படவில்லை என்றாலும், இது முதலில் Wabetainfo தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பகிரப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஆட்டோ டெலிட்டாகும் வரும் மெசேஜ்க்கு அருகில் Kept என்ற புக்மார்க் ஐகானை காணலாம். இந்த ஐகான் ஆட்டோ டெலிட் ஆகும் மெசேஜ் தக்க வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாகவும் ஒரு குறியீடு காட்டுகிறது.
இந்தியாவில் Redmi Note 12, Redmi Note 12 Pro அறிமுகம்: இதன் விலை ரூ.15,499 தொடங்குகிறது!
இந்த அம்சம் பயனர்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும் பீட்டா சோதனை முடிந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பில் பிராக்ஸி வசதியும் அமல்படுத்தப்பட்டது.
அதாவது, வாட்ஸ்அப் இணையம் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில், இந்த பிராக்ஸி முறையைப் பயன்டுத்தி தொடர்ந்து பயன்படுத்தலாம். அபுதாபி, துபாய் போன்ற நாடுகளில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த பிராக்ஸி அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.