அமேசானில் iQOO 9 SE ஆஃபர்!, இது Redmi Note 12 Pro Plus விட சிறந்ததா?

By Dinesh TG  |  First Published Jan 7, 2023, 10:30 AM IST

iQOO 9 SE விலை இந்தியாவில் குறைந்துவிட்டது, இப்போது ரூ.30,000க்குள் கிடைக்கிறது. இதேபோன்ற விலை வரம்பில், Xiaomi தனது Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களும் மலிவு விலையில் பிரீமியம் அம்சங்களுடன் வருகின்றன. எனவே, iQOO 9 SE,  Redmi Note 12 Pro Plus விட சிறந்ததா என்பதை இங்கே விரைவாகப் பார்க்கலாம்.


அமேசானில் iQOO 9 SE தள்ளுபடி

iQOO 9 SE முதலில் ரூ.33,990 ஆரம்ப விலையில் கிடைத்தது.  தற்போது அமேசானில் 29,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  எனவே, வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விலை 128 ஜிபி மாடலுக்கானது. ரெட்மி நோட் 12 ப்ரோ+ விரைவில் இந்தியாவில் ரூ.29,999க்கு விற்பனைக்கு வருகிறது.

Latest Videos

undefined

iQOO 9 SE ஸ்மார்ட்போன்,  Redmi Note 12 Pro  Plus விட சிறந்ததா?

iQOO 9 SE கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது, ஆனால் அது வழங்கும் அம்சங்களின் காரணமாக இன்று வரையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த இரண்டு ஃபோன்களிலும் உள்ள அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. iQOO இல் உள்ள டிஸ்ப்ளே சற்று சிறியது, ஆனால் ரெட்மி நோட் ஃபோனில் உள்ளதை போல அனுபவம் கிடைக்கும்.

செயல்திறனைப் பொறுத்தவரை, iQOO 9 SE  செயல்திறன் சிறப்பாக உள்ளது. ஏனெனில் இதில் முதன்மையான Snapdragon 888 SoC உள்ளது. இது பழைய சிப்செட் என்றாலும்,  சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெறலாம். உயர் செயல்திறன் நிலையிலான  கேம்களை விளையாட முடியாது, ஆனால் குறைந்த பட்சம் கிராபிக்ஸ் அமைப்பு கிடைக்கும். மேலும்  Redmi ஃபோனைப் போல் எந்த பின்னடைவும் இருக்காது. Redmi Note 12 Pro+ ஆனது MediaTek Dimensity 1080 SoC பிராசசர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வந்துவிட்டது Samsung Galaxy F04.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

இரண்டு போன்களும் நல்ல கேமரா செயல்திறனை வழங்குகிறது.  ஆனால் Redmi Note 12 Pro+ இரவில் அதாவது குறைந்த வெளிச்சத்தில் அதிக துல்லிய காட்சிகளை வழங்க முடியும். ரெட்மி ஃபோன் HDR பயன்முறையை வழங்குகிறது, அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் இயல்பானதாக இருக்கும். ரெட்மி ஃபோனில் பேட்டரி ஆயுள் சிறப்பாக இருக்கும்.  இது மிகப் பெரிய சக்தி கொண்ட பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும்  ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகின்றன. முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 25 நிமிடங்கள் ஆகும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.

நல்ல செயல்திறனை விரும்புபவர்கள் iQOO 9 SE ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். அதே நேரத்தில்  ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை விரும்புபவர்கள் சிறந்த கேமரா செயல்திறன் கொண்ட Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போனை வாங்கலாம்
 

click me!