இனி Google Drive இல்லாமலே ஒரு போனில் இருந்து இன்னொரு போனுக்கு வாட்ஸ்அப் மாற்றலாம்!

By Dinesh TGFirst Published Jan 7, 2023, 9:25 AM IST
Highlights

வாட்ஸ்அப் நிறுவனம் Move to iOS என்ற வசதியை அறிமுகப்படுத்திய நிலையில், இதே அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. பயனர் இடைமுகத்தை மேம்படுத்தியது. பயனர் தேவைகளுக்கு ஏற்றவாறு சில அம்சங்களை மாற்றியமைத்தும், மேம்படுத்தியும் வருகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டில் சில பயனுள்ளஅம்சங்களைக் கொண்டு வர வாட்ஸ்ப் திட்டமிட்டுள்ளது. அதில் தற்போது முக்கிய அம்சங்களில் ஒன்று புதிய வாட்ஸ்அப் மெசேஜ்களை ஸ்மார்ட்போன்களுக்கு இடையே பரிமாற்றும் அம்சமாகும்.இந்த அம்சம் கடந்த ஆண்டு iOS தளத்திற்கு கொண்டு வந்தது. 

ஆனால் இப்போது WABetaInfo தளத்தில் வெளிவந்துள்ள விவரங்களின்படி, ஐஓஎஸ் தளத்தைப் போலவே ஆண்ட்ராய்டு தளத்திலும் மெசேஜ்களை மொத்தமாக ஒரு ஸ்மார்போனில் இருந்து மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு பரிமாறிக்கொள்ளும்  வசதி வரவுள்ளது. மேலும் இது விரைவில் செயலிகளில் அப்டேட் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் ​​வாட்ஸ்அப் செயலியானது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் டிரைவ் மூலமாக சேட் மெசேஜ்களை பேக் அப் செய்யும் அம்சம் வழங்குகிறது. ஒரு பயனர் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு மாறும்போதெல்லாம், அவர்கள் தங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய வேண்டும், பின்னர் பேக்அப் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீட்டெக்கலாம்.

Chrome Update: இந்த 2023 ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்களில் Google Chrome சேவை நிறுத்தம்!

இதற்கு WhatsApp Settings> Chats > Chat transfer to Android என்ற வகையில் சென்று, ஆப்ஷனை ஆன் செய்யலாம். இப்படி செல்வதன் மூலம் தங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை ஒரு ஸ்மார்ட்போனிலிருந்து மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு மாற்ற முடியும்.

இதற்கிடையில், வாட்ஸ்அப் மெசேஜ் அம்சம் உட்பட வேறு சில அம்சங்களிலும் செயல்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் தளத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் சில அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேவையில்லாத, ஆபாசமான, வெறுக்கத்தக்க ஸ்டேட்டஸ் யாராவது வைத்திருந்தால், அந்த ஸ்டேட்டஸை புகாரளிக்கலாம். மேலும், வாட்ஸ்அப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறக்கூடிய சந்தேகத்திற்கிடமான ஸ்டேட்டஸையும் பயனர்கள் புகாரளிக்கலாம். பீட்டா சோதனை முடிந்த பிறகு இந்த அம்சம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!