Jio 5G : ஜியோ 5G சேவையை விரிவுபடுத்தும் பணி மும்முரம்! இப்போது 72 நகரங்களில் 5ஜி

By Dinesh TG  |  First Published Jan 7, 2023, 11:33 AM IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குவாலியர், ஜபல்பூர், லூதியானா, சிலிகுரி ஆகிய 4 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. 


ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளை டெல்லி, மும்பை, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது, அதே நேரத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி நாத்வாரா மற்றும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவம்பர் 10 அன்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தியது, பின்னர், குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த நாள் விரிவுபடுத்தியது. இந்த நிலையில், தற்போது புதிதாக குவாலியர், ஜபல்பூர், லூதியானா, சிலிகுரி ஆகிய 4 நகரங்களில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்த அறிமுகம் குறித்து ஜியோ தரப்பில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜியோ ட்ரூ 5ஜி பெற்ற நகரங்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உள்ளது. ஜியோ 5ஜியை வேகமாக வெளியிடுவதாகவும், இந்த நகரங்களில் பெரும்பாலானவற்றில் இருக்கும் ஒரே 5ஜி சேவை இதுவாகும்.

இந்த அறிமுகமானது மத்தியப் பிரதேசத்தில் ஜியோ ட்ரூ 5ஜி கவரேஜை வலுப்படுத்துகிறது,  ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டதன் மூலம், தலைநகர், போபால் மற்றும் இந்தூர் உட்பட, மத்திய பிரதேசத்தின் அனைத்து முக்கிய பெரிய நகரங்களிலும் 5G சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் மற்றும் ஒரே ஆபரேட்டர் என்ற பெருமையை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. 

Gpay, PhonePe வேலை செய்யவில்லையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

இதே போல், லூதியானாவில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் ஒரே ஆபரேட்டர் ஜியோ ஆகும்.  முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி கோயில்கள் டிசம்பர் 14 அன்று இந்த சேவைகளைப் பெற்றன, கொச்சி மற்றும் குருவாயூர் கோவிலுக்கு டிசம்பர் 20 அன்று ஜியோ 5G சேவைகள் கிடைத்தன.

டிசம்பர் 26 அன்று, திருமலா, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் குண்டூரில் டிசம்பர் 26 அன்று ஜியோ 5G சேவைகள் தொடங்கப்பட்டன, அதே நேரத்தில் லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், காரர் மற்றும் டெராபஸ்ஸி டிசம்பர் 28 அன்று தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று போபால் மற்றும் இந்தூரில் ஜியோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது, புவனேஷ்வர் மற்றும் கட்டாக் ஆகிய இடங்களிலும் 5ஜி சேவைகள் வந்துவிட்டன.

click me!