Meta நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! அடுத்த கட்ட நடவடிக்கையும் தொடக்கம்!!

By SG Balan  |  First Published Jan 11, 2023, 6:40 PM IST

மெட்டா நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வேலைக்கு சேர உள்ளவர்களின் பணி நியமனத்தையும் ரத்து செய்கிறது.


கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான இந்த நிறுவனத்தில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும். சுமார் 11,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், புதிதாக முழுநேர பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பணி நியமனத்தையும் திரும்பப் பெறுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தொழில்நுட்ப நிருபர் ஜெர்ஜிலி தனது டுவிட்டர் பக்கத்தில் மெட்டா நிறுவனம் லண்டனில் முழு நேர வேலைவாய்ப்புகளை ரத்து செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது “மெட்டா நிறுவனம் லண்டனில் முழு நேர வேலைவாய்ப்பு, பணி நியமனங்களை ரத்து செய்துள்ளது. புதிய பட்டதாரிகள் பிப்ரவரி மாதம் சேர இருந்த நிலையில், அவர்களது பணி நியமனம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு சுமார் 20 பேர் எனக்குத் தெரியும். FTE சலுகைகளை Meta திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

விண்டோஸ் 7 வைத்திருப்பவர்களுக்கு கெட்ட செய்தி!

இதற்கு முன்பு ஜெர்ஜிலி கூறுகையில், முழு நேர பணி வாய்ப்பு பெற்ற இன்ஜினியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், சில செய்தி தளங்களில் வெளிவந்த தகவல்களின்படி, மெட்டா அலுவலகங்கள் முழுவதும் அமைதியாக பணிநீக்கம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நியூயார்க்கில் உள்ள மெட்டா அலுவலகத்தை மூடவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதன் உண்மைத் தன்மை குறித்த விவரங்கள் வரவில்லை.

மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கெனவே ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்து இமெயில் செய்திருந்தார். பணிநீக்கங்களுக்கு அவர் முழுப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மெட்டா மற்றும் ட்விட்டரைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 25,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வேண்டுமா? கொஞ்சம் பொறுத்திருங்க… வருகிறது Redmi 12C

click me!