புது சலுகையின் படி வி நிறுவனம் தனது பயனர்களுக்கு நள்ளிரவு 12 மணி துவங்கி அதிகாலை 6 மணி வரை அதிவேக டேட்டா மற்றும் வார இறுதி நாட்களில் டேட்டா ரோல் ஓவர் சலுகையை வழங்குகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி ஹீரோ அன்லிமிடெட் கேம்பெயின் திட்டத்தின் கீழ் டேட்டா டிலைட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2GB வரை கூடுதல் டேட்டாவை தங்களின் தினசரி டேட்டா சலுகையில் பெற முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் கிடையாது
வி ஹீரோ அன்லிமிடெட் சலுகைகள் பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு டேட்டா தீர்ந்து போகும் போது உதவுகிறது. இந்த பிரத்யேக சலுகை மூலம் வி அன்லிமிடெட் சந்தா மதிப்பை கூட்டும் வகையில் அமைந்து உள்ளது. வி ஹீரோ அன்லிமிடெட் சலுகை டிஜிட்டல் உலகில் மிகவும் அத்தியாவசியமான மொபைல் இண்டர்நெட் வசதியை வழங்குகிறது. சமீபத்தில் சோனி லிவ் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகையை ரூ. 82 விலையில் வி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
புது சலுகையின் படி வி நிறுவனம் தனது பயனர்களுக்கு நள்ளிரவு 12 மணி துவங்கி அதிகாலை 6 மணி வரை அதிவேக டேட்டா மற்றும் வார இறுதி நாட்களில் டேட்டா ரோல் ஓவர் சலுகையை வழங்குகிறது. சேவைகளை வேகப்படுத்தும் விதமாக ஹீரோ அன்லிமிடெட் பிரிவில் வி ரிசார்ஜ் சலுகைகளை சேர்த்து இருக்கிறது.
வி ஹீூரோ அன்லிமிடெட் சலுகைகள்:
- அன்லிமிடெட் டேட்டா நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை. பிரீபெயிட் சந்தாதாரர்கள் எவ்வித தடையும் இன்றி அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் இல்லை.
- வார இறுதி நாட்களில் டேட்டா ரோல் ஓவர்: இந்த சலுகையில் வார நாட்களில் வழங்கப்படும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி. இதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
- டேட்டா டிலைட்: தினசரி டேட்டா அளவை கடந்தும் 2GB வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதனை பெற 121249 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கவோ அல்லது வி செயலியை கொண்டு டேட்டா டிலைட் சேவையை அன்லாக் செய்ய முடியும்.
விலை விவரங்கள்:
வி ஹீரோ அன்லிமிடெட் டேட்டா சலுகை ரூ. 299 மற்றும் அதிக விலையில் கிடைக்கிறது. வி ஹீரோ அன்லிமிடெட்ட சலுகைகளின் விலை ரூ. 359, ரூ. 409 மற்றும் ரூ. 475 விலைகளில் கிடைக்கிறது. இவற்றுடன் அதிக டேட்டா வழங்கப்படுகிறது.