சோனி லிவ் நிறுவனத்துடனான கூட்டணியை அடுத்து வி நிறுவனம் இந்த சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் ரூ. 82 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் மொபைல் சாதனங்களுக்கு சோனி லிவ் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. சோனி லிவ் நிறுவனத்துடனான கூட்டணியை அடுத்து வி நிறுவனம் இந்த சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய ஓடி.டி. பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் நோக்கில் புது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாண்டர்டு பிரீபெயிட் சலுகை போன்று இல்லாமல், இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படவில்லை. பயனர்களுக்கு 28 நாட்களுக்கான சோனி லிவ் சந்தா வழங்கப்படுகிறது. சோனி லிவ் பிரீமியம் சந்தா மூலம் பயனர்கள் அந்த தளத்தில் கிடைக்கும் அனைத்து தரவுகளையும் கண்டு களிக்க முடியும். பயனர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான தரவுகள் மற்றும் நிகழ்ச்சிகள் சோனி லிவ் செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி லிவ் பிரீமியம் சந்தா:
அனைத்து வி பிரீபெயிட் பயனர்களும் சோனி லிவ் பிரீமியம் சந்தாவை எவ்வித டேட்டா கட்டுப்பாடுகளும் இன்றி பயன்படுத்த முடியும். வி சமீபத்தில் 31 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து இருந்தது. வி சலுகையுடன் கிடைக்கும் சோனி லிவ் பிரீமியம் சந்தா மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் தொலைகாட்சிகளில் சோனி லிவ் தரவுகளை பார்க்க முடியும்.
வழக்கமாக சோனி லிவ் பிரீமியம் சந்தா விலை மாதம் ஒன்றுக்கு ரூ. 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் வி செயலியில் உள்ள வி மூவிஸ் மற்றும் டி.வி. ஆப்ஷன் பயனர்களுக்கு ஏராளமான தரவுகளை வழங்குகிறது. இதில் 450-க்கும் அதிக நேரலை டி.வி. சேனல்கள், நேரலை செய்தி சேனல்கள், ஒ.டி.டி. செயலிகளின் பிரீமியம் தரவுகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.