நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரு கைகளை கூப்பிய எமோஜி (Folded hands) ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்த எமோஜிதான் முன்னணியில் இருந்தது.
2021-ஆம் ஆண்டு இன்றோடு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு மொபைல் போனில் நீங்கள் அதிகமாகப் பயன்படுத்திய எமோஜிகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
வாட்ஸ்அப் தொடங்கி சோஷியல் மீடியா அரட்டையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன எமோஜிகள். எழுத்து வடிவில் மெசேஜ் வழியில் தொடரும் அரட்டைகளுக்கு மத்தியில் எமோஜி வடிவில் அரட்டையை அடிக்கவும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் இது இளைய தலைமுறையினருக்கு உதவிக்கரமாக இருந்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட எமோஜிகள் 2020-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. எந்தெந்த எமோஜிகளை பயனாளர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் எமோஜிபீடியா தரவுகளின் அடிப்படையில் தெரிய வரும். அந்த வகையில் 2021-ஆம் ஆண்டில் எந்த எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய தகவல்களை யுனிகோட் கன்சோர்ட்டியம் என்ற நிறுவனம் அண்மையில் வெளியிடுள்ளது.
அதன்படி 2021-ஆம் ஆண்டில் டியர்ஸ் ஆஃப் ஜாய் எமோஜி (Tears of joy emoji) முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது என்பதைக் குறிக்க கண்ணீருடன் சிரிக்கும் எமோஜி பயன்படுத்துகிறது. இந்த எமோஜிதான் மற்ற எமோஜிக்களைவிட அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அடுத்த இடத்தில் ரெட் ஹார்ட் (red heart) எமோஜி உள்ளது. மூன்றாம் இடத்தை ரோலிங் ஆன் ஃப்ளோர் லாஃபிங் (rolling on the floor laughing) என்ற இமோஜி பிடித்திருக்கிறது.
தொடர்ந்து நான்காம் இடத்தை தம்ஸ் அப் (Thumbs up) எமோஜியும், ஐந்தாவது இடத்தை லவுட்லி க்ரையிங் ஃபேஸ் (Loudly Crying Face) என்ற எமோஜியும் பிடித்துள்ளது. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரு கைகளை கூப்பிய எமோஜி (Folded hands) ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்த எமோஜி முன்னணியில் இருந்தது. இதேபோல face blowing a kiss எமோஜி, two hearts எமோஜி, smiling face with hearts எமோஜி, smiling face with smiling eyes எமோஜி போன்றவை அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. நம்மவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் 'birthday cake' எமோஜி, balloon எமோஜி, pleading face எமோஜி போன்றவை முன்னேற்றம் கண்டுள்ளன.