பில் கேட்ஸ் விட்ட சாபம்..! எலன் மஸ்க்கால் ட்விட்டர் நாசமாகுமாம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 05, 2022, 11:45 AM IST
பில் கேட்ஸ் விட்ட சாபம்..! எலன் மஸ்க்கால் ட்விட்டர் நாசமாகுமாம்..!

சுருக்கம்

ட்விட்டரை மேலும் மோசமானதாக மாற்றினால், அப்படியே செய்யட்டும். நான் அதை பற்றி நிச்சயம் பேசுவேன், ஆனால் இப்படித் தான் நடக்கும் என்று நான் கூற மாட்டேன்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் விலையில் வாங்கி இருக்கும் எலான் மஸ்க், அதை கொண்டு சரியான தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி தான் என பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக போலி தகவல்களை கையாளும் விதத்தில் ட்விட்டர் நிறுவன பிரச்சினைகள் எலான் மஸ்க் தலைமையின் கீழ் மேலும் மோசமாகும் என பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார். 

பில் கேட்ஸ் கருத்து:

‘‘அவர் அதனை மேலும் மோசமானதாக மாற்றிடலாம். அது அவரின் போக்கு கிடையாது - டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அவரின் சாதனைகள் மிகவும் பெரியது. அந்தந்த துறைகளில் கைத்கேர்ந்த வல்லுனர்களை பணியில் அமர்த்தி இரு நிறுவனங்களில் வெற்றியை பெற்றார். ஆனால் சமூக வலைதளத்தில் அப்படி வெற்றி அடைய முடியாது. சமூக வலைதளங்களை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எலான் மஸ்க் எண்ணம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியான ஒன்று தான்" என தி வால் ஸ்டிரீட் ஜர்னல் நடத்திய சி.இ.ஓ. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற போது பில் கேட்ஸ் தெரிவித்தார். 

‘‘இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது, ஆனால் எப்போதும் நாம் திறந்த மனதுடன் அனுக வேண்டும், எலான் மஸ்க்-ஐ குறைத்து மதிப்பிட முடியாது. வெளிப்படைத் தன்மை பற்றி அவர் பேசும் போது, அவரின் இலக்கு என்ன? 'தடுப்பூசிகள் மக்களை கொன்று விடும் என கூறும் போது அவர் எப்படி உணர்கிறார்' அல்லது 'பில் கேட்ஸ் மக்களை உளவு பார்க்கிறார்' என்பது போன்ற தகவல்கள் பரவ வேண்டும் என அவர் நினைக்கிறாரா," என அவர் மேலும் தெரிவித்தார்.  

கருத்து சுதந்திரம்:

ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை பிறப்பித்து பின்பற்றி வரும் கடுமையான திட்டங்களில் மாற்றம் செய்ய எலான் மஸ்க் உறுதி  அளித்து இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் ட்விட்டர் தளத்தில் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். கருத்து சுதந்திரத்திற்கான எலான் மஸ்க்-இன் அணுகுமுறை ட்விட்டர் தளத்தில் தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகளவில் பரவ வழி வகுக்கும் என பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், “பருவ நிலை மாற்றத்திற்காக பல பில்லியன் டாலர்களை நான் முதலீடு செய்து வருகிறேன். இந்த இலக்கை அடைவதில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கை நான் பாராட்டுகிறேன். ஆனால் எலான் மஸ்க் பற்றி நல்ல விதமாக கூற என்னிடம் எதுவும் இல்லை.  அவரை டுவிட்டரை மேலும் மோசமானதாக மாற்றினால், அப்படியே செய்யட்டும். நான் அதை பற்றி நிச்சயம் பேசுவேன், ஆனால் இப்படித் தான் நடக்கும் என்று நான் கூற மாட்டேன்" என பில் கேட்ஸ் தெரிவித்து உள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அம்மாடியோவ்... ஒரே ரீல்ஸ் தான்... ஏங்கக கூமாபட்டி தங்கபாண்டியின் வளர்ச்சியை பாருங்க...
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ்: நீங்கள் பார்ப்பதை தேடலாம் - எப்படி?