குடியரசு தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட்டில் தரம் வாய்ந்த பிராண்டட் ஸ்மார்ட் டிவி வெறும் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பிளிப்கார்ட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிக் சேவிங் சேல் தொடங்க உள்ளது. ஜனவரி 15 முதல் 20 ஆம் தேதி வரையில் இந்த விற்பனை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு தற்போது முன்னதாகவே ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமாக TCL நிறுவனத்தின், துணை நிறுவனமான iFFALCON ஸ்மார்ட் டிவிக்கு நல்ல ஆஃபர் வந்துள்ளது.
TCL என்பது உலகளவில் டிவி மார்க்கெட்டில் முன்னனி இடத்தில் உள்ள கம்பெனியாகும். இந்தியாவில் TCL கம்பெனி, iFFALCON துணை நிறுவனங்களின் தயாரிப்புகள், டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் கிடைக்கின்றன. கூகுளின் ஆண்ட்ராய்டு சான்றிதழ் பெற்ற டிவிகள் இவற்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், iFFALCON F53 டிவி மிகக்குறைந்த விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
Jio 5G in Tamil Nadu: தமிழகத்தில் ஜியோ 5ஜி விரிவாக்கம்!! உங்க ஏரியா இருக்கானு பாருங்க!!
விலை விவரம்:
iFFALCON டிவியின் அசல் விலை: 26,990
தற்போதைய விற்பனை விலை: 10,499
கூடுதல் தள்ளுபடி: -1,500
வங்கி கார்டுகள் சலுகை 10%: - 900
மொத்தம்: 8,099
சிறப்பம்சங்கள்:
iFFALCON டிவியில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், HDR டிஸ்ப்ளே, கூகுள் அசிஸ்ட்டெண்ட், மைக்ரோ டிம்மிங், டால்பி ஆடியோ, 16W ஸ்பீக்கர், குரோம்காஸ்ட், ப்ளூடூத், வைஃபை என பல்வேறு அம்சங்கள் உள்ளன. டிவியின் பக்கவாட்டில் 2 HDMI, 1 USB, கேபிள் டிவிக்கான பின், ஆடியோ ஜேக் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1 வருட வாரண்டி உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக 999 செலுத்தி 3 வருட முழுமையான பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம்.
Airtel வழங்கும் Netflix பிரீமியம் ஆஃபர்! முழு விவரங்கள் இதோ!!
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 40 பிளிப்கார்ட் சூப்பர் நாணயங்களைச் செலுத்துவதன் மூலம் பிளஸ் மெம்பர்ஷிப்பிற்கு பதிவு செய்யலாம், இது அவர்களுக்கு பிக் சேவிங்ஸ் டேஸ் ஆஃபருக்கான ஆரம்ப அணுகலை வழங்குகிறது. Flipkart Big Savings Days விற்பனையின் போது வாங்குவதற்கு Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் பயனர்கள் 5 சதவீத கேஷ்பேக் பெறலாம். சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறுவார்கள். Flipkart இன் பிக் சேவிங் டேஸ் நிகழ்வின் போது 12AM, 8AM மற்றும் 4PM மணிக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும்.