தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் Jio 5G விரிவாக்கம்! உங்க ஏரியாவுல 5ஜி எப்போது வரும்? விவரங்கள் இதோ!

By Dinesh TG  |  First Published Jan 25, 2023, 12:45 PM IST

இந்தியாவில் சுமார் 184 நகரங்களில் ஜியோ 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் 5ஜி சேவை வந்துள்ளன.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழகத்தில் சுமார் 11 நகரங்களில் அதன் 5G கவரேஜை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் 184 நகரங்களுக்கு கொண்டு சென்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துக்குடி, புதுச்சேரியில் ட்ரூ 5ஜி வந்துவிட்டது. தமிழகத்தில் இவ்வளவு மாவட்டங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் ஆபரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது. 

ஜனவரி 11 அன்று, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 5ஜி சேவை    யை அறிமுகப்படுத்திய பிறகு, முதலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறியது. 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தற்போது ஜியோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் என கூடுதலாக 50 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மொத்த எண்ணிக்கையை 184 நகரங்களாகக் கொண்டு சென்றது. "இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்கும் 5G சேவைகளை மொத்தமாக அறிமுகம் செய்தது என்பது மிகப்பெரிய விஷயமாகும். ஒவ்வொரு மண்டலத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான எங்கள் முயற்சிக்கு தமிழக அரசு தொடர்ச்சியான ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம். இவ்வாறு ஜியோ செய்தி தொடர்பாளர் கூறினார். 

இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மட்டும் செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்

மேற்கண்ட நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்படுவார்கள், இதன் மூலம் 1ஜிபிபிஎஸ் + வேகத்தில் அன்லிமிடேட் டேட்டாவை எந்தவிதமான கூடுதல் கட்டணமும் இன்றி அனுபவிக்கலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5ஜி சேவையை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே, கூடிய விரைவில் தமிழகத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் 5ஜி வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!