வெறும் ரூ.7000 மதிப்பி 5000 mAH பேட்டரியுடன் கூடிய TECNO Spark Go 2023 அறிமுகம்

By Dinesh TG  |  First Published Jan 25, 2023, 12:22 PM IST

டெக்னோ நிறுவனம்  ஸ்பார்க் கோ சீரிஸின் புதிதாக குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வெறும் 7000 ரூபாய்க்குள் டைப்-சி சார்ஜிங், 5000 mAh பேட்டரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 


சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் டெக்னோ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் 'ஸ்பார்க் கோ' என்ற ஸ்மார்ட்போன் சீரிஸில் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனினை தற்போதுஅறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் TECNO Spark Go 2023 ஆகும்.  இதில் டைப் சி சார்ஜர், 5000 mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளன. இந்த வசதிகளோடு ரூ.7000க்கு கீழ் உள்ள பட்ஜெட்டில் கிடைப்பது அரிதானது. கூடுதலாக, 13-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, டூயல் ரிங் கேமரா அமைப்பு உள்ளன.

Latest Videos

undefined

டெக்னோ தனது ஸ்பார்க் கோ சீரிஸில் புதிய பதிப்பை பட்ஜெட் ஃபோனாக கேமரா, நீடித்து உழைக்கும் பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக தெரிவித்துள்ளது. 6.56 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளன. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரிவில் இறுதித் தேர்வாக Tecno Spark Go 2023 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TECNO Spark Go 2023 விலை மற்றும் சிறப்பம்சங்கள்:

டெக்னோ ஸ்பார்க் கோ 2023 என்பது டெக்னோ நிறுவனம் வழங்கும் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். 3ஜிபி ரேம், 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி என்ற ஒரே மாடல் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6999 ஆகும். இது மூன்று வண்ண நிறங்களில் கிடைக்கிறது. அவை: நெபுலா பர்பில், எண்ட்லெஸ் பிளாக் மற்றும் யுயுனி ப்ளூ. இன்று ஜனவரி 23, 2023 முதல் TECNO Spark Go 2023 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். 

கால்பந்து அணியை வாங்குவதற்காக Washington Post நிறுவனத்தை விற்க முடிவு!

TECNO Spark Go 2023 சிறப்பம்சங்கள்:

20:9 திரை விகிதத்துடன் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 480 nits பிரைட்னஸ், IPX2 வாட்டர் ப்ரூப்,  ஹீலியோ A22 2.0 GHz CPU பிராசசர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை உள்ளன. 3GB RAM, 32 GB மெமரி, 256 GB வரை விரிவாக்கக்கூடிய மெமரி வசதிகள் உள்ளன.

கேமராவைப் பொறுத்தவரையில் டூயல் கேமரா, 13-மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் கேமரா உள்ளன. 5000mAh பேட்டரி, அதற்கு ஏற்ப 32 டைப் சி வகை 10W சார்ஜர் வழங்கப்படுகிறது.
 

click me!