கூகுளுக்கு அடுத்தபடியாக, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள ChatGPT தளத்திற்கு சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் பங்களிப்புடன் கடந்த நவம்பர் மாத இறுதியில் உருவான தளம் ChatGPT ஆகும். இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, மொழியில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் பெற முடியும்.
உதாரணத்திற்கு, ஒரு இமெயில் வேண்டுமென்றால், எந்த விதமான இமெயில் வேண்டுமோ அதை டைப் செய்தால் போதும், உடனே இமெயில் டெம்ப்ளேட்கள் வந்துவிடும். கூகுளில் தேடுவதை போல் சாட் ஜிபிடி தளத்திலும் என்ன வேண்டுமானாலும் தேடலாம், அதற்கு ஏற்ற முடிவுகளை பெறலாம். இந்த தளம் சோதனை முயற்சியாக ஆரம்பத்தில் இலவச பயன்பாட்டுக்கு இருந்தது.
undefined
இந்த நிலையில், ChatGPT தளத்திற்கான சந்தா கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புரொபஷனல் பிளானின் விலை 42 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3427). இது தொடர்பாக ஷாகித் காவாஜா என்ற AI டெலவலப்பர் தனது சமூக வலைதள பக்கத்தி், சாட் ஜிபிடியின் கட்டண விவரத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், சாதாரண பயன்பாடை விட, சந்தா திட்டத்தில் உள்ளவர்களுக்கு Chat GPT மிகவிரைவாகவும், கூடுதல் அம்சங்களும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மிகவிரைவில் ChatGPT சந்தா கட்டணம் அமல்படுத்தப்படும் என்றும், அதில் கூடுதலாக மின்னஞ்சல் டெம்ப்ளேட்டுகள், புரோகிராமிங் கோடுகள், நிரல்கள் கிடைக்கும் என்று மைக்ரோசாப்ட் ஒபன் ஏஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான அறிக்கையின்படி, கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கு மேலான பயனர்கள் ChatGPT பயன்படுத்துவதாக தெரிகிறது.
புதிய சந்தா திட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது?
புரொபஷனல் திட்டத்தில் ChatGPT நிபுணத்துவம் எப்போதும் கிடைக்கும் (பிளாக்அவுட் ஸ்கிரீன் இருக்காது), ChatGPT இலிருந்து விரைவான பதில்கள் (மெதுவாக லோட் ஆகுதல் இல்லை) மற்றும் உங்களுக்குத் தேவையான பல மெசேஜ்கள், செய்திகள் (2 மடங்கு அதிகம்) கிடைக்கும்.
இந்தியாவில் இருந்து ஒரு மாதத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன் ஏற்றுமதி!
OpenAI தரப்பில் கூறுகையில், "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம். நீஙகள் பணம் செலுத்தும் செயல்முறை மற்றும் பைலட்டை அமைக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்ட ஆரம்பகால சோதனைத் திட்டமாகும், மேலும் இந்த நேரத்தில், நாங்கள் கட்டண சார்பு அணுகலைப் அனைவருக்கும் கட்டாயப்படுத்தவில்லை நினைவில் கொள்ளவும். "
இதற்கிடையில், மைக்ரோசாப்ட் OpenAI இல் $10 பில்லியனை செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, எனவே, நிறுவனத்தின் மதிப்பை கிட்டத்தட்ட $29 பில்லியன் ஆகும்.