இந்தியாவில் ஜியோ 4ஜி சேவையைத் தொடங்கி 6 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதை கொண்டாடும் விதமாக அட்டகாசமாக 6 ஆஃபர்களை அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவையுடன் அறிமுகமானது. களத்தில் இறங்கிய உடனையே இலவச டேட்டா, வாய்ஸ்கால் என ஆஃபர்களை வாரி வழங்கியது. ஜியோவின் இந்த அதிரடி சலுகைகளால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கினர்.
ஏர்செல், டொக்கோமோ, எம்டிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சரிந்தன. கிட்டத்தட்ட 12 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்த நிலையில், ஜியோவின் வருகைக்கு பிறகு வெறும் 4 ஆக குறைந்துள்ளது.
இவ்வளவு அதிரடிகளைத் தாண்டி ஜியோ நிறுவனம் தற்போது 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கொண்டாடும் விதமாக 6 ஆஃபர்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வருடாந்திர சந்தாதரர்களுக்கு மட்டுமே உள்ளது.
உங்கள் போன் 5ஜி சேவையை ஏற்குமா? பார்ப்பது எப்படி? இதை செய்தால் கண்டுபிடித்துவிடலாம்!!
அதன்படி, ரூ.2,999 என்ற வருடாந்திர திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 1 வருட ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. 75ஜிபி அதிவேக டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், ஸிகோ கூப்பன், நெட்மெட்ஸ் கூப்பன், ரிலையன்ஸ் டிஜிட்டலின் 500 ரூபாய் கூப்பன், ஏஜியோ, ஜியோ சாவன் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் குறிப்பாக ஜியோ சாவனுக்கு ஆறு மாத சந்தாவுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜியோ தளதத்தில் 2990 ரூபாய்க்கு மேல் ஆடைகள், பொருட்களை வாங்கினால், 750 தள்ளூபடி வழங்கப்படுகிறது. இதேபோல், விரைவில் மலிவு விலையில் 5ஜி சேவை, 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.