அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன்கள், மடிகணினிகளை பயன்படுத்தும் பயனர்களின் உடலில் வயதாகும் செயல்முறை வேகமாக நடைபெறுவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் பலவும் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நாம் அனைவரும் 24 மணி நேரமும் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் வாட்ச் என ஏதேனும் கேட்ஜெட் உடன் நமது பொழுதைக் கழிக்கிறோம். இந்த சாதனங்கள் அனைத்தும் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. இவை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கூட கடினம். இந்த சாதனங்களை பயன்படுத்தினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த சாதனங்களை தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் நமது வயதாகும் செயல்முறை வேகமெடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
பிராண்டியர்ஸ் இன் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற கேஜெட்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி நமது உடலில் வயதான செயல்முறையை அதிகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான்் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் ஜாட்விகா ஜிபுல்டோவிச், “டிவி, மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகள் போன்ற சாதனங்களில் இருந்து வெளிப்படும் அளவுக்கு அதிகமான நீல ஒளி தோல் மற்றும் கொழுப்பு செல்கள் முதல் உணர்ச்சி நியூரான்கள் வரையிலான நம் உடலில் உள்ள செல்களில் தீங்கு விளைவிக்கும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலையான இருளில் வைக்கப்பட்டிருக்கும் மரபணுக்களுடன் நீல ஒளியின் அதிக நேரம் வைக்கப்பட்ட மரபணுக்களை ஒப்பிட்டு வயதாகுதல் செயல்முறையை நீல ஒளி வேகப்படுத்துவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அளவுக்கு அதிகமான நீல ஒளி வெளிப்பாடு மனிதர்களில் மன அழுத்த ஹார்மோனைத் தூண்டும் என்றும் இது செல்களின் செயல்பாட்டைத் தூண்டி நம்மை வேகமாக வயதாக்கி, முதுமைத் துாற்றமளிக்க வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நீல ஒளியானது தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Inhale Vaccine : ஊசியே இல்லாத தடுப்பூசி! சீனா கண்டுபிடிப்பு!!