ரோபோகளை திருமணம் செய்யும் மனிதர்கள் - ஆராய்ச்சியாளர் தகவல்

By Dinesh TGFirst Published Sep 6, 2022, 8:10 PM IST
Highlights

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மனிதர்கள் 2050ம் ஆண்டு ஆண்/பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக ரோபோக்களை திருமணம் செய்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

நவீன உலகில் மனிதர்களின் வேலைகளை மிச்சப்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ராணுவம் தொடங்கி, வீட்டு வேலைகள் வரையில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகறியச்  செய்வதற்காக நாளுக்கு நாள் போட்டிப் போட்டு ரோபோகளை தயாரித்து வருகின்றன. மனிதர்களின் உணர்ச்சிகளை செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹியூமனாய்ட் ரோபோக்கள் தத்ரூபமாக வெளிக் கொணர்ந்து வரும் நிலையில் மனிதர்களின் பாலியல் தேவைக்கு ரோபோக்களைப் பயன்படுத்தலாமா என்ற ஆராய்ச்சியை பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சிலிகான் கொண்டு உருவாக்கப்படும் பாலியல் தேவைகளுக்கான பொம்மைகளின் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. சிலிகான் தோலுடன் கூடிய பாலியல் ரோபோக்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதர்களின் தசை போலவே எலாஸ்டிக் தன்மை கொண்ட சிலிகான் ரப்பர் தற்போது இந்த வகை ரோபோ தயாரிப்பில் பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது. ரோபோகளின் கை, கால்கள் மீது சிலிகான் தோல் போர்த்தி, முகத்தில் மனிதர்களைப் போன்ற கண், காது, மூக்கு, உதடு உள்ளிட்டவற்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரோபோக்களுக்கு மனிதர்களின் முகபாவனைகள், கை, கால் அசைவுகள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு மூலம் உட்புகுத்தப்படுகிறது.

Inhale Vaccine : ஊசியே இல்லாத தடுப்பூசி! சீனா கண்டுபிடிப்பு!! 
 

தற்போது பாலியல் தேவைகளுக்கான ரோபோ உருவாக்கம் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்றாலும் வரும் 2050ம் ஆண்டில் மனிதர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டிய தேவை இன்றி ஆண்/பெண் ரோபோக்களை மணந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர் டாக்டர் இயான் பெர்சான் தெரிவித்துள்ளார்.

பாலியல் தேவைகளுக்கான ரோபோக்கள் ஆபத்தானவை இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த ரோபோ பரிசோதனை மற்றும் தயாரிப்பு இனிவரும் நாட்களில் தொழில்நுட்ப மேம்பாடு கொண்டதாக மாறும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

click me!