ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! வருகிறது "Flipkart Big Billion Days"!!

By Dinesh TG  |  First Published Sep 6, 2022, 12:42 PM IST

Flipkart Big Billion Days எனப்படும் மெகா ஷாப்பிங் திருவிழா இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
 


ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில், அமேசானுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் அவ்வபோது ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் எனப்படும் மெகா ஷாப்பிங் திருவிழா இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.  இது தொடர்பான தேதி அறிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த மாத இறுதியில் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை அல்லது 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை 7 நாட்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமேசான் நிறுவனமும் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஷாப்பிங் திருவிழாவை இதே நேரத்தில் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிளிப்கார்ட் நிறுவனம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆபர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ, ஆக்சிஸ் கிரெடிட் கார்ட்களுக்கு 10% ஆபர்  வழங்கப்படுகிறது. வாங்கக் கூடிய பொருட்களைப் பொருத்து ரூ.1500 முதல் ரூ.2000 வரை ஆபர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ரூ.1 ப்ரீ புக்கிங் ஆபரை பயன்படுத்தி நமக்கு தேவையான பொருளை ரூ.1 செலுத்தி முன்னதாகவே பதிவு செய்து கொண்டு பிக்பில்லியன்  டே காலத்தில் மீதம் உள்ள தொகையை செலுத்தி பொருளை பெற்றுக் கொள்ளலாம். 

Tap to resize

Latest Videos

மேலும் பிக்பில்லியன் டே சேல் ஸ்பான்சராக போகோ (Poco) நிறுவனம் இருப்பதால் பிற நிறுவன செல்போன்களைக் காட்டிலும் போகோ செல்போன்களுக்கு அதிக ஆபர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக Poco F4 5G செல்போனை தள்ளுபடி விலையாக ரூ.20 ஆயிரத்திற்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது. 

பிக்பில்லியன் டே மெயின் பார்ட்னராக நாய்ஸ் (noise) நிறுவனம் இருப்பதால் அந்நிறுவனத்தின் ப்ளூடூத் ஹெட்போன்கள், இயர் போன்கள், ஸ்மார்ட் வாட்சஸ் போன்ற பொருட்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படலாம்.

BSNL Recharge offer: ஒரு மாதத்திற்கு பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் ஃஆபர் அறிவிப்பு!!
 

ஆப்பிள் நிறுவனத்தைப் பொருத்தளவில் ஐபோன் 14 மாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் முந்தைய மாடலான ஐபோன் 13, ஐபோன் 12 சிறந்த சலுகையில் வழங்கப்படலாம். குறிப்பாக ஐபோன் 14 - 50 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோனுடன் சேர்த்து ரியல்மி, போகோ, விவோ, ரெட்மி மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் பிளிப்கார்ட் தள்ளுபடி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஆக்சசரிஸ், டிவி மற்றும் அப்ளையன்ஸ் ஆகியவற்றில் 80% வரை தள்ளுபடி வழங்கப்படலாம்

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 2030க்குள் 6ஜி வருது - பிரதமர் வெளியிட்ட சூப்பர் தகவல் !
 

click me!