வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா வெர்ஷனில், ஸ்டேடஸ் பார்த்தல், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பிரதானமான சேட்டிங் தளமாக பெரும்பாலானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி வாட்ஸ்அப் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வகையில் மெசேஜ் அனுப்புவது, ஸ்டேட்டஸ் பார்ப்பது, குழுவை உருவாக்குவது உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வழங்கி உள்ளது. அதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அப்டேட்களை பீட்டா வெர்ஷனில் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
undefined
மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?
நமக்கு நாமே
வாட்ஸ்அப்பில் தற்போது வரை நாம் பிறருக்கு தான் மெசேஜ் அனுப்பி வந்திருப்போம். ஆனால் இப்போது நமது எண்ணிற்கு நாமே மெசேஜ் அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி நமது எண்ணை YourSelf என பதிவு செய்து கொண்டு நமது எண்ணிற்கு நாமே மெசேஜ் அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நமக்குத் தேவையான பைல்கள், PDF டாகுமெண்ட்கள், முக்கிய தகவல்களை நமக்கு நாமே அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.
அதே போன்று புதிதாக ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் அவரது பெயரை பதிவு செய்து பின்னர் தான் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால், தற்போது குறிப்பிட்ட நபரின் எண்ணை ஏதேனும் ஒரு சேட்டில் டைப் செய்தால் அந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமா? கால் செய்ய வேண்டுமா என கேட்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கால், மெசேஜ் செய்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளுக்கு..திராவிடன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
ஸ்டேட்டஸ்
தற்போது வரை பிறருடைய ஸ்டேட்டசை பார்ப்பதற்கு ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று அதில் குறிப்பிட்ட நபரின் பெயரைக் கொண்டு அவரது ஸ்டேட்டசை பார்த்திருப்போம். ஆனால், தற்போது சேட் பகுதியிலேயே குறிப்பிட்ட நபரின் DPயில் அவரது ஸ்டேடசை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
குழு
இதற்கு முன்னர் வரை ஒரு வாட்ஸ் அப் குழுவில் அதிபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டு 512 நபர்கள் வரை குழுவில் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்