உங்க கிட்ட இந்த மொபைல் இருக்கா? அப்போ இனி அதில் வாட்ஸ்அப் வேலைசெய்யாது!

By Raghupati R  |  First Published Sep 5, 2022, 8:58 PM IST

அக்டோபர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட மாடல் ஐபோன்களில் வாட்ஸ் அப் சேவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்அப் செயலி பல்வேறு வகையான அம்சங்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. அத்தகைய அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு, அதற்கு ஏற்றாற் போல் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டும். அந்தவகையில், ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது என WABetaInfo தெரிவித்துள்ளது. 

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

இது தொடர்பாக ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 வெர்ஷனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்கள் ஐபோன்களைப் புதுப்பிக்க வேண்டும், அப்டேட் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஐஓஎஸ் 16 வெர்ஷன் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது ஐஓஎஸ் 14 மற்றும் 15 பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5s மாடல்களில் தான், ஐஓஎஸ் 10, 11 வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. எனவே, இந்தப் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டுமெனில், சமீபத்திய ஐஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். வாட்ஸ்அப்பின் இந்த அறிவிப்பால் அதிகளவு பயனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். 

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

ஐஓஎஸ் 10 மற்றும் 11 வெர்ஷன்கள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டதால், அந்த இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே புதிய மென்பொருளுக்கான அப்டேட் செய்தி வந்திருக்கும். எனவே, இப்போதே அதை அப்டேட் செய்வது நல்லது. அதே போன்று ஆண்டிராய்ட் பயனர்கள் 4.1 அல்லது அதற்கு அடுத்த வெர்ஷன்களை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கும் வாட்ஸ் அப் சேவை வழங்கப்பட மாட்டாது.

மேலும் செய்திகளுக்கு..திராவிடன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

click me!