BSNL Recharge offer: ஒரு மாதத்திற்கு பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் ஃஆபர் அறிவிப்பு!!

By Raghupati RFirst Published Aug 29, 2022, 3:42 PM IST
Highlights

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதாவது பிஎஸ்என்எல் மற்ற தனியார் நிறுவனங்களைப் போல மலிவான மற்றும் வேகமான இணையச் சேவையை வழங்காது, ஆனால் அது வேறு எந்த நிறுவனங்களிலும் கிடைக்காத திட்டத்தை வழங்கி வழங்குகிறது.

பிஎஸ்என்எல் இன்று புதிய திட்டத்தை சென்னை உள்பட 12 மண்டலங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாத வேலிடிட்டி வெறும் 19 ரூபாய்க்கு கிடைக்கிறது. மிகக் குறைந்த பணத்தில் செய்யப்படும் இந்த ரீசார்ஜ் மூலம், உங்களது சிம்-மை ஒரு மாதம் செயலில் வைத்திருக்க முடியும்.

இந்த ரூ. 19 திட்டம் உண்மையில் ரேட் கட்டர் ஆகும். இது இப்போது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. 2016க்கு முன், ரேட் கட்டர்களின் முக்கியத்துவம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் சாதாரண ரீசார்ஜ் உடன், நுகர்வோர்களும் குறைந்த கட்டணத்தில் அழைக்கும் வசதியை பெறுவதற்காக, ரேட் கட்டர்களை வாங்கினர். 

மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?

எத்தனை நாட்கள் செல்லுபடியாகும் ?
பிஎஸ்என்எல் இந்த ரேட் கட்டர் திட்டம் சென்னைக்கு ரூ. 19 ரூபாய்க்கு வருகிறது. மாநிலங்களைப் பொறுத்து இந்த ரேட் கட்டர் திட்டம் மாறுபடுகிறது. நிறுவனம் இந்தத் திட்டத்தை VOICE RATE CUTTER 21 என மட்டுமே பட்டியலிட்டுள்ளது. இதில், நிமிடத்திற்கு 20 பைசா வீதம் நெட் மற்றும் ஆஃப் நெட் அழைப்புகளைப் பெறலாம். இந்த ரேட் கட்டர் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது, ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் உங்கள் சிம் 30 நாட்களுக்கு செயலில் இருக்கும். இந்த திட்டம் அனைத்து பயனர்களுக்கும் இல்லை. குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே நிறுவனம் வழங்குகிறது.

யாருக்கு பயனளிக்கும் ?
நீங்களும் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தினால், பிஎஸ்என்எல் உங்கள் முதன்மை சிம் கார்டு அல்ல என்றால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில், 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். பிஎஸ்என்எல் தவிர, வேறு எந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவிலும் இத்தகைய திட்டம் கிடைக்காது.

மேலும் செய்திகளுக்கு..நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

வருடாந்திர செலவு 252 ரூபாய்
பிஎஸ்என்எல்லின் இந்த ரேட் கட்டர் திட்டத்தின் மூலம், மிகக் குறைந்த விலையில் உங்கள் சிம்மைச் செயலில் வைத்திருக்க முடியும். இதற்காக ஒரு வருடத்தில் ரூ. 252 மட்டுமே செலவழிக்க வேண்டும். ஏர்டெல்லில் 28 நாட்கள் வேலிடிட்டிக்கு நீங்கள் ரூ 179 செலவழிக்க வேண்டும், ஜியோவில் 14 நாட்கள் வேலிடிட்டிக்கு ரூ 119 செலவழிக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!