வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக 3 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை கூடுதலாகப் பாதுகாக்க இயலும்.
வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக 3 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை கூடுதலாகப் பாதுகாக்க இயலும்.
வாட்ஸ் அப் நிறுவனம் 3 புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளதுள்ளது குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில் “ வாட்ஸ் அப்பில் 3 புதிய வசதிகள் அறிமுகப்படுத்துகிறோம். குழுவில் உள்ள ஒருவர் மற்றவர்களுக்கு எந்த அறிவிப்பும் கூறாமலேயே குரூப்பிலிருந்து வெளியேறலாம்.
மக்கள் பணம் ரூ.96 கோடியை மோசடி செய்த அஞ்சல ஊழியர்கள்: சிஏஜி அறிக்கையில் ஷாக்
ஒருவர் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்கக்கூடாது என்பதை கட்டுப்படுத்தலாம், வாய்ஸ் மெசேஜ்களுக்கு ஸ்கீரீன்ஷாட்களை தடை செய்யலாம் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகறோம். வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய வசதிகள் என்ன
சத்தமில்லாமல் குரூப்பிலிருந்து வெளியேறலாம்:
இந்த வசதியின் மூலம் குரூப்பில் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தாமல் குருப்பிலிருந்து வெளியேறலாம். குரூப்பின் அட்மின் மட்டும் யார் வெளியேறுகிறார்கள் என்பதை கவனிக்க முடியும். இந்த வசதி இந்த மாதத்தில் வருகிறது.
ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும்
வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது நாம் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்கக்கூடாது என்பதை கட்டுப்படுத்த முடியும். அதாவது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை யார் பார்க்கலாம், பார்க்க்கூடாது என்பதை கட்டுப்படுத்துவதுபோல், இதையும் கட்டுப்படுத்தலாம். குடும்பத்தினர், நண்பர்களுடன் இருக்கும்போது, இந்த வசதி பயன்படும், இந்த வசதியும் இந்த மாதம் அறிமுகமாகிறது.
ஸ்க்ரீன்ஷாட் ப்ளாக்கிங்
நாம் அனுப்பும் புகைப்படங்கள், வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும், ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாமல் தடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்படஉள்ளது. இதன்படி இந்தவசதியின் கீழ் நாம் அனுப்பும் செய்தியை ஒருவர் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். இதை சேமிக்கவோ ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது.இந்த வசதி பரிசோதனையில் இருப்பதால் விரைவில் அறிமுகமாகும்.
தெலங்கானா குழந்தைக்கு ரூ.16 கோடி மருந்து இலவசம்: மனிதநேயத்துடன் உதவிய மருந்து நிறுவனம்
2 நாட்களுக்குபின் டெலிட் வசதி
ஒருவருக்கு ஒரு மெசேஜ் அல்லது புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பி 2 நாட்களுக்குபின் அதை டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தற்போது இந்த வசதி ஒரு மணிநேரம், 8நிமிடங்கள் 16 வினாடிகளுக்குள் மட்டுமே வேலை செய்யும். அதாவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியபின், ஒரு மணிநேரம், 8 நிமிடங்கள், 16 வினாடிகளுக்குள் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை நீக்க முடியும்.
இந்த வசதியை மெசேஜ் அனுப்பி 12 மணிநேரத்துக்குப்பின், 2 நாட்களுக்குள் நீக்க முடியும். இதன் மூலம் குரூப்பில் உள்ள அடமின்கள் யார் மெசேஜையும் எளிதாக நீக்க முடியும். இந்த வசதியும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
ஏற்கெனவே இந்த ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை இந்த ஆண்டு அறிமுகம் செய்துவருகிறது. ஒரு மெசேஜிக்கு ரீப்ளே செய்ய, எமோஜிகான்கள் வழங்குதல், வாய்ஸ்மெசேஜை ஸ்பீட்அப் செய்தல், ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோர் தங்களின் சாட் ஹிஸ்டரியை ஐபோனுக்கு மாற்றுதலாகும்.