வரும் ஆகஸ்ட் மாதத்தில், ராயல் என்பீலட் மற்றும் ஹோன்டா நிறுவனங்கள் இரு புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய இருக்கின்றன. இது பைக் பிரியர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில், ராயல் என்பீலட் மற்றும் ஹோன்டா நிறுவனங்கள் இரு புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய இருக்கின்றன. இது பைக் பிரியர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை மாதத்திலும் இரு சக்கர வாகனம் தயாரி்க்கும் நிறவனங்கள் புதிய பைக்குகலை அறிமுகம் செய்வதிலும் டெஸ்ட் டிரைவ் செய்ய அறிமுகம் செய்வதிலும் பிஸியாகஇருந்தனர். அந்த வகையில் பிஎம்டபிள்யு ஜி310ஆர், பஜாஜ் பல்சரின் என்160 பைக் அறிமுகம் செய்யப்பட்டன.
undefined
ஆகஸ்ட் மாதத்திலும் ஏராளமான புதிய பைக், மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில் முக்கியமானது ராயல் என்பீல்ட் மற்றும் ஹோன்டா நிறுவனங்களின் அறிமுகங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராயல் என்பீல்ட் ஹன்ட்டர் 350
ராயல் என்பீலட் ஹன்ட்டர் 350 சிசி பைக்கை டெஸ்ட் டிரைவில் பலரும் பார்த்துவிட்டார்கள். வரும் வாரங்களில் இந்த பைக் முறைப்படி சந்தையில் அறிமுகமாகிறது. ஜே பிளாட்ஃபார்மில்தான் ஹன்ட்டர் பைக்கும் அறிமுமாகிறது. அலாய் டயர்கள், மற்றும் ஸ்போக் டயர்கள் என இரு மாடலுடன் வருகிறது. ஹிமாலயன் பைக்கில் இருப்பதுபோன்று ட்ரிப்பர்ஜிபிஎஸ் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஜே பிளாட்ஃபார்மில் அனைவருக்கும் ஏற்ற பைக்காக ஹன்ட்டர் இருக்கும். இதன் எக்ஸ் ஷோரும் விலை, ரூ.1.30 முதல் ரூ.1.40 லட்சம் வரை இருக்கும்.
ஹோண்டா பைக்
ஆகஸ்ட் 8ம் தேதி ஹோன்டாவின் புதிய வாகனம் அறிமுகமாகிறது. ஆனால், இதுவரை எந்த வாகனம் என்று ஹோன்டா கூறவில்லை. ஆனால் ஹோன்டா சார்பில் புதிய பைக் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆதலால், 300 முதல் 500 சிசி பைக்காக இருக்கலாம். தற்போது சிபி350எக்ஸ் வகை வாகனங்கள் ஹோன்டாவில் உள்ளன. ஆதலால் அடுத்ததாக சிபி500எக்ஸ் வகை பைக்காக இருக்கும் எனத் தெரிகிறது.