OPPO Reno 8: ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களை கவரும் ஃப்ளாக்‌ஷிப் கேமரா & சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங்

By karthikeyan VFirst Published Jul 22, 2022, 5:25 PM IST
Highlights

OPPO Reno 8 series ஓப்போவின் உயர்தரம் மற்றும் உச்சபட்ச டெக்னாலஜிக்கு அடையாளம். Reno 8 மொபைலை ஓப்போ அறிமுகப்படுத்தியுள்ளது. 

OPPO Reno 8 series ஓப்போவின் உயர்தரம் மற்றும் உச்சபட்ச டெக்னாலஜிக்கு அடையாளம். Reno 8 மொபைலை ஓப்போ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அவுட்லுக் அபரிமிதமானது. ஜூலை 25ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் ரீடெய்ல் கடைகளில் இந்த மொபைலை வாங்க முடியும். இதன் விலை ரூ.29999 ஆகும். நிகரில்லா கேமரா அனுபவம், கண்கவர் டிசைன், அதிவேக சார்ஜிங் என மொபைலின் மீது ஆர்வம் கொண்டவர்களை சுண்டி இழுக்கிறது OPPO Reno 8 மொபைல்.

புகைப்பட நிபுணர்:

Reno8-ஐ புகைப்பட நிபுணர் என்று ஓப்போ அழைக்கிறது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் மேம்படுத்தப்பட்ட அம்சம் என்றால் ஃப்ளாக்‌ஷிப் கேமரா சிஸ்டம். 50MP பின்பக்க கேமரா Sony IMX766 சென்சாரை கொண்டது. 32 MP செல்ஃபி கேமரா, Sony IMX709 RGBW சென்சாரை கொண்டது. சோனி சென்சார்களை பயன்படுத்துவதன் மூலம், இரைச்சல் குறைகிறது.

அந்த 2 சோனி சென்சார்களும், மிகச்சிறப்பான, உயர்தரமான ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது. இந்த சென்சார்களின் DOL-HDR டெக்னாலஜி, வீடியோவின் டைனமிக் ரேஞ்சை மேம்படுத்துகிறது. இரவு நேரங்களில் தெளிவான ஃபோட்டோ, வீடியோ எடுக்கப்படுவதை உறுதி செய்கிறது.

வீடியோக்கள் எடுக்கும்போது இந்த தொழில்நுட்பங்கள் எந்தளவிற்கு பயன்படுகிறது என்பதையும், எவ்வளவு தரமான வீடியோக்களை தருகிறது என்பதையும் உணரமுடியும். அல்ட்ரா நைட் வீடியோ அம்சம் பரிசோதிக்கப்பட்டது. சுற்றுப்புற ஒளிக்கேற்ப இயல்பாக தகவமைத்துக்கொண்டு, தரமான, முக அங்கங்களை தெளிவாக வெளிப்படுத்துகிற ஃபோட்டோக்களை வழங்குகிறது Reno 8 ஸ்மார்ட்ஃபோன். 

Ultra-clear night portraits மற்றும் AI Portrait Retouching ஆகிய அம்சங்கள், பயனாளர்களுக்கு மிகச்சிறந்த ஃபோட்டோ, வீடியோக்களை வழங்க உதவும். இயக்கத்தில் இருக்கும்போது நேரத்தை குறைத்து வீடியோ எடுக்க உதவும் Hyperlapse அம்சமும் இந்த ஃபோனில் உள்ளது. திரைப்படங்கள் மாதிரியான வீடியோக்களை எடுக்க, 960fps AI Slow-motion அம்சம் பயன்படுகிறது. 

வெறும் 11 நிமிடத்தில் 50% சார்ஜ் ஏறும்:

பேட்டரி சார்ஜை குறைவாக பயன்படுத்தி சிறந்த செயல்திறனை வழங்கும் மாதிரியான ஸ்மார்ட்ஃபோன்களை தயாரிப்பது தான் ஓப்போவின் தனித்திறனே. அந்தவகையில், ஓப்போவின் Reno 8 ஸ்மார்ட்ஃபோனும் சார்ஜ் விஷயத்தில் செம கிங். 80W SUPERVOOC flash charge-ஐ கொண்டது இந்த மொபை. 4500 mAh திறன் கொண்ட பேட்டரி. வெறும் 11 நிமிடத்தில் 50% சார்ஜ் ஆகும். வெறும் 28 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகிவிடும். 

OPPO Reno 8 மொபைலை எது மிகுந்த செயல்திறன் மிக்கதாக ஆக்குகிறது?

OPPO Reno8, MediaTek Dimensity 1300 chipset-ஐ பெற்றிருக்கிறது. 8GB RAM மற்றும் 128GB ROM பிராசஸரை கொண்டது. 90HZ refresh rate, அருமையான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. OPPO, Super - conductive VC liquid cooling system-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்ஃபோனை சூடாகாமல் கூலிங்காக பராமரிக்க உதவுகிறது. 

ஓப்போவின் அடையாளம் - குறைவான எடை:

ஓப்போவின் மற்ற ஸ்மார்ட்ஃபோன்களை போலவே Reno 8-ம் குறைவான எடை கொண்டது. எடை குறைவாக இருந்தால்தான், கேமரா மற்றும் மற்ற பயன்பாடுகளும் எளிதாக இருக்கும். குறைவான எடையில் நல்ல டிசைனில் ஆன ஸ்மார்ட்ஃபோன் Reno 8 ஆகும். 7.67மிமீ தடிமன் மற்றும் வெறும் 179 கிராம் எடை கொண்டது.

Reno 8 ஸ்மார்ட்ஃபோன் Gold மற்றும் Shimmer Black ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது. 6.4-inch AMOLED டிஸ்ப்ளேவை கொண்டது.

மிகச்சிறந்த ஓஎஸ்(ஆபரேட்டிங் சிஸ்டம்):

ColorOS 12.1 என்பது தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதற்கு உகந்த OS ஆகும். யூடியூப் வீடியோ கட்டுப்பாட்டுக்கான Air Gestures, scrolling, answering ஆகிய குறிப்பிடத்தகுந்த அம்சங்களும் உள்ளன. பல ஸ்க்ரீன்களை இணைக்கும் தனித்துவமான அம்சமும் உள்ளது. இதன்மூலம் ஃபோனை பல சிஸ்டங்களுடன் கனெக்ட் செய்யலாம்.  Omoji அம்சத்தை மறந்துவிடக்கூடாது. 200க்கும் அதிகமான கூறுகளை உள்ளடக்கியது. 

இறுதித்தீர்ப்பு:

அனைத்துவிதத்திலும் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் OPPO Reno 8 உண்மையான ஃப்ளாக்‌ஷிப்பை காட்டுகிறது. சிறந்த கேமரா டெக்னாலஜி, அருமையான டிசைன், மிகச்சிறந்த பேட்டரி சார்ஜிங் என அனைத்துவிதத்திலும் தரமான ஃபோனாக உள்ளது. அனைத்துவிதமான சிறப்பம்சங்களுடன் கூடிய சிறப்பான செயல்திறன் கொண்ட OPPO Reno 8 ஸ்மார்ட்ஃபோன் ரூ.30 ஆயிரத்திற்கு கிடைப்பது ஆச்சரியம்; ஆனால் உண்மை.

ஓப்போ-வின் இன்னபிற புதுமையான தயாரிப்புகள்:

Reno8 வெளியீடு OPPO-லிருந்து மற்ற இரண்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  1. OPPO Pad Air  ரூ.16999 (4 GB +64GB variant) மற்றும் ரூ.19999 (4GB +128GB variant). 2. OPPO Enco X2 True Wireless Noise Cancelling Earbuds ரூ.10999. ஜூலை 25லிருந்து ஃப்ளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் மெயின் ரீடெய்லர்களிடம் வாங்கலாம். 

Reno 8 ஸ்மார்ட்ஃபோனுக்கான ஆஃபர்கள்:

* ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோட்டாக், பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10% கேஷ்பேக் (ரூ.3000 வரை).

* ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோட்டாக் வங்கி ஆகியவற்றில் இ.எம்.ஐ பரிவர்த்தனை அற்ற கார்டுகளுக்கு ரூ.1200 வரை கேஷ்பேக்.

* முன்னணி வங்கி கார்டுகளுக்கு 6 மாதங்கள் வரை வட்டியில்லாத இ.எம்.ஐ ஆப்சன். 

* முன்னணி நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.2500லிருந்து இ.எம்.ஐ ஆப்சன் பெறலாம். 

* குறைந்தபட்சம் ரூ.4285 செலுத்தி ஃபோனை பெறலாம். 

* ஜூலை 25லிருந்து ஜூலை 31 வரை Reno 8 ஸ்மார்ட்ஃபோனுக்கு ரூ.2000 வரை ஆஃபர் அளிக்கிறது ஓப்போ. 

* ஓப்போ Reno பயனாளர்கள் ஃபோனை சர்வீஸ் செய்யும்போது எளிதான இ.எம்.ஐ ஆப்சன் உள்ளது. 

* ரூ.5999 மதிப்புள்ள ஓப்போ வாட்ச்சை பரிசாக வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
 

click me!