citroen c3: citroen c3 launch: சிட்ரான் சி3 கார் இந்தியாவில் அறிமுகமானது: விலை என்ன? சிறப்பு அம்சங்கள் என்ன?

By Pothy RajFirst Published Jul 20, 2022, 2:56 PM IST
Highlights

பிரெஞ்சு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள் சிட்ரான் சி3 வகை கார் இந்தியாவில் இன்று அறிமுகமானது. 10 நிறங்களில், 2 வேரியன்ட்களில் உருவாகியுள்ள காரின் அடிப்படை விலை, ரூ.5.70 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பிரெஞ்சு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள் சிட்ரான் சி3 வகை கார் இந்தியாவில் இன்று அறிமுகமானது. 10 நிறங்களில், 2 வேரியன்ட்களில் உருவாகியுள்ள காரின் அடிப்படை விலை, ரூ.5.70 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மாருதி சுஸூகி இக்னிஸ், டாடா பஞ்ச், ரொனால்ட் கிகர், நிசானின் மெக்னைட் ஆகிய காம்பாக்ட் எஸ்யுவி கார்களுக்கு கடும் போட்டியாக சிட்ரான் சி3 கார் இருக்கும். 

பிரான்ஸின் சிட்ரான் நிறுவனம் ஏற்கெனவே சிட்ரான் சி5 காரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில் இது அந்நிறுவனத்தின் 2வது காராகும்.

சிட்ரான் காரின் சிறப்பு அம்சங்கள்

1.    சிட்ரான் சி3 வகை கார்கள் 2 வேரியன்ட்களில் 10 நிறங்களில் கிடைக்கிறது.

2.    காரின் நீளம் 3,981 எம்எம் நீளம், 1,733மில்லி மீட்டர் அகலம், 1,586 மி.மி உயரம். 

3.    காரின் வீல் பேஸ் உயரும் 2,540மிமீ அளவில் உயரமாக வைக்கப்பட்டுள்ளது. கிரவுண்ட கிளையரன்ஸ் 180எம்எம், 315 லிட்டர் அளவுக்கு பின்பக்க பூட்ஸ்பேஸ் இருக்கிறது

4.    சிட்ரான் சி3 காரில் V வடிவத்தில் எல்இடி விளக்குகல் காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. பகல்நேரத்திலும் ஒளிவீசக்கூடிய அளவில் விளக்குகளும் உள்ளன. 

5.    சிட்ரான் சி3 காரின் வெளிப்புற நிறம் இரு வண்ணங்களில் சேர்ந்தார்போல் அதாவது டூவல்டோனில் கிடைக்கிறது.

6.    கார்களில் டயர் அனைத்தும் டைமன்ட்கட் அலாய்வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன

7.    காரின் உள்பகுதியிலும் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும்வகையில் மிகவும் வசதியாகவும், அழகாகவும்வடிவமைக்கப்பட்டுள்ளன.

8.    டேஷ்போர்டில் 10.1 டச்ஸ்க்ரீன், ஆன்ட்ராய்ட், ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் டிஜிட்டல் சிஸ்டம் உள்ளன.

9.    இரு எஞ்சின்களில் சிட்ரோசி3 வருகிரது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின். 81ஹெச்பி திறன்கொண்டது. 2வதாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினாலும் இதில் 6 ஸ்பீட் கியர்கள் உள்ளன.

10.     காரில் 4 ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், லைட்டர் போர்ட், ஏபிஎஸ் ஏர்பேக், ஓட்டுநர், முன்பக்கம் அமந்திருப்பவருக்கு ஏர்பேக்,ஆட்டோ டோர் லாக், பார்க்கிங் செய்யும் வசதி, அதிவேகத்தில் காரை இயக்கினால் கார் எச்சரிக்கை செய்யும் வசதிகள் உள்ளன.

11.    எக்ஸ்ஷோருமில் சிட்ரான் 3 கார் விலை ரூ.5.70 லட்சத்தில்தொடங்கி, 1.2பி டர்பே பீல் டூவல் டோன் கார் அதிகபட்சமா ரூ.8.05 லட்சம் வரையில் இருக்கிறது.

click me!