நத்திங் போன் (1) vs மோட்டோரோலா எட்ஜ் 30 - அம்சங்கள், விலை ஒப்பீடு.... எது மாஸ் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Jul 15, 2022, 1:18 PM IST
Highlights

நத்திங் நிறுவனத்தின் புதிய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 மாடல்களின் அம்சங்கள், விலை மற்றும் விவரங்கள் ஒப்பீடு.

கார்ல் பெய் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. நத்திங் போன் (1) மூலம் களமிறங்கி இருக்கும் நத்திங் பிராண்டு ஆண்ட்ராய்டு உலகின் ஆப்பிள் எனும் பெயரை பெற முயற்சித்து வருகிறது. நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இந்தியா மட்டும் இன்றி சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நத்திங் போன் (1) இந்த விலை பிரிவில் ஏராளமான மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இதையும் படியுங்கள்: பில்ட்-இன் MP3 பிளேயர் கொண்ட நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

அந்த வகையில், நத்திங் போன் (1) மாடலுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதில் மோட்டோரோலா எட்ஜ் 30 குறிப்பிடத்தக்க மாடல் ஆகும். இரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள், விலை மற்றும் விவரங்களை ஒப்பிட்டு பார்ப்போம். 

இதையும் படியுங்கள்: ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான பலன்களுடன் புது நோக்கியா போன் அறிமுகம்...!

டிசைன்:

நத்திங் போன் (1) மாடலின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் பேக், 160 எல்இடி-க்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த எல்.இ.டி. லைட்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜிங், நோட்டிபிகேஷன் என பல்வேறு விவரங்களை குறிக்கும் வகையில் வித்தியாசமாக மிளிரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP53 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. 

இதையும் படியுங்கள்: விரைவில் வெளியாகும் ரெனோ 8 சீரிஸ்.... அசத்தல் டீசர் வெளியிட்ட ஒப்போ...!

மோட்டோரோலா எட்ஜ் 30 மாடல் மிக மெல்லிய டிசைன் மற்றும் குறை எடை கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் பாடி கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

டிஸ்ப்ளே:

நத்திங் போன் (1) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மாடல்களில் தலைசிறந்த டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டு உள்ளன. நத்திங் போன் (1) மாடலில் 6.55 இன்ச் அளவில் 1080x2400 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. 
மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் 6.5 இன்ச் அளவில் HDR10+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இரு மாடல்களை ஒப்பிடும் போது மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் அதிக ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இரு மாடல்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், இரு மாடல்களிலும் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை.

மென்பொருள்:

ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி பிளஸ் பிராசஸர், கார்டெக்ஸ் A78 சிபியு மற்றும் அட்ரினோ 642L கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

நத்திங் போன் (1) மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் (1) மாடலில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.-க்கு நிகரான ஆண்ட்ராய்டு ஓ.எஸ். உள்ளது.

கேமரா:

இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் கூடுதலாக 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் செல்பி கேமராவை பொருத்தவரை மோட்டோரோலா மாடலில் 32MP சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் (1) மாடலில் 16MP சென்சார் தான் உள்ளது. 

நத்திங் போன் (1) மாடலில் 4500mAh பேட்டரி உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் 4020 mAh பேட்டரி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

விலை:

இந்திய சந்தையில் நத்திங் போன் (1) மாடலின் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என துவங்குகிறது. எட்ஜ் 30 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என துவங்குகிறது. 

click me!