பில்ட்-இன் MP3 பிளேயர் கொண்ட நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

By Kevin Kaarki  |  First Published Jul 15, 2022, 7:43 AM IST

ஐடெல் இந்தியா நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் பில்ட்-இன் MP3 பிளேயர் கொண்டு இருக்கிறது.


ஐடெல் இந்தியா நிறுவனம் ஐடெல் ரோர் 60 பெயரில் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் இயர்போனில் எப்.எம். மோட், பில்ட் இன் MP3 பிளேயரில் மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது. சமீபத்தில் தான் ஐடெல் நிறுவனம் ஐடெல் ஸ்மார்ட்வாட்ச் 1 ES மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. 

இதையும் படியுங்கள்: ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான பலன்களுடன் புது நோக்கியா போன் அறிமுகம்...!

Tap to resize

Latest Videos

undefined

புதிய ஐடெல் ரோர் 60 மாடலில் கிரேடியண்ட் டிசைன், எர்கோனாமிக் கொல்லார், 10 மில்லிமீட்டர் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் உள்ளன. இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு மியூசிக், ஏழு மணி நேர எப்.எம்., 21 மணி நேர MP3 பயன்படுத்தும் அளவுக்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: விரைவில் வெளியாகும் ரெனோ 8 சீரிஸ்.... அசத்தல் டீசர் வெளியிட்ட ஒப்போ...!

மேலும் இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது. இண்டகிரேட் செய்யப்பட்ட MP3 பிளேயர், எப்.எம். ரேடியோ மற்றும் எஸ்.டி. கார்டு போன்ற அம்சங்கள் இருப்பதால் ஸ்மார்ட்போன் இல்லாத சமயத்திலும் இதை பயன்படுத்த முடியும். மேலும் ஐடெல் ரோர் 60 மாடலில் டூயல் பேரிங் சப்போர்ட் உள்ளது. இதை கொண்டு கணினி மற்றும் மொபைல் போன் என இரு சாதனங்களில் ஒரே சமயத்தில் இணைத்துக் கொள்ள முடியும். 

இதையும் படியுங்கள்:  ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அசத்தல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

ஐடெல் ரோர் 60 அம்சங்கள்:

- பில்ட் இன் MP3 பிளேயர்
- எப்.எம். மோட்
- ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி
- 10 மீட்டர் ப்ளூடூத் ரேன்ஜ்
- மைக்ரோ யு.எஸ்.பி. 
- கிரேடியண்ட் டார்க் புளூ
- 15 மணி நேரத்திற்கு மியூசிக் பிளே டைம்
- ஏழு மணி நேர எப்.எம். பிளே டைம்
- 21 மணி நேர MP3 பிளே டைம்
- டூயல் பேரிங்
- மூன்று வித சிலிகான் இயர்டிப்கள்
- வாய்ஸ் ஆக்டிவேஷன்
- ஒரு வருட வாரண்டி

ஐடெல் ரோர் 60 மாடலின் விலை ரூ. 999 ஆகும். இதன் விற்பனை ஐடெல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் இதர ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.

click me!