நத்திங் போன் (1) ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய இன்வைட் கோட் தேவையில்லை: மிஸ் பண்ணாதிங்க

By Pothy RajFirst Published Jul 14, 2022, 11:08 AM IST
Highlights

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள நத்திங் போன்(1),  பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய ஸ்பெஷல் இன்வைட் இன்றி ஆர்டர் செய்யலாம். 

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள நத்திங் போன்(1),  பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய ஸ்பெஷல் இன்வைட் இன்றி ஆர்டர் செய்யலாம். 

இன்வைட்-ஒன்லி காலம் முடிந்திருந்தாலும் நந்திங் போன் வாங்க விரும்புவோர் கவலைப்படத் தேவையில்லை. எந்தவிதமான ஸ்பெஷல் இன்வைட் கோட் இன்றி பிளிப்கார்ட்டில் நத்திங் போனை வாங்கலாம். 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார் பெய் தலைமையில் லண்டனில் உருவாகியுள்ள நந்திங் போன் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கெனவே ஸ்பெஷல் இன்வைட் கோட் மூலம் நந்திங் போனுக்கு ஆர்டர் குவிந்தநிலையில் ஏராளமான ரசிகர்கள் அதை வாங்க முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் ஸ்பெஷல் இன்வைட் கோட்இல்லாமல் நத்திங் போனை வாங்குவதற்கு பிளிப்கார்ட் தளம் வாய்ப்பை வழங்குகிறது. எந்தவிதமான ஸ்பெஷல் இன்வைட் கோட் இல்லாமல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2ஆயிரத்துக்கு நந்திங் போனை வாங்கலாம். 

 

Nothing Phone (1) to feature a 120Hz adaptive refresh rate display (/nothing Tiktok). Plus, the pre-order passes are live on Flipkart. pic.twitter.com/hzpDShZYyC

— Mukul Sharma (@stufflistings)

செல்போன்கள் குறித்த டிப்ஸ்களை வழங்கும் முகுல் ஷர்மா ட்விட்டரில் கூறுகையில் “  பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ ஆர்டர் மூலம் ரூ.2ஆயிரத்துக்கு நத்திங் போனை ஆர்டர் செய்யலாம். பிளிப்கார்ட் தளத்துக்குச் சென்று, நந்திங் போனை தேடி உடனடியாக பை-நவ் செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

நத்திங் போனுக்காக ப்ரீ ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ரூ.2ஆயிரம் ரீபண்டபிள் தொகையாகும். அதாவது, நத்திங் போனை ப்ரீபுக்கிங் செய்தவர்களுக்கும், அறிமுகச் சலுகையும், அக்ஸசசரீஸ் சலுகை விலையும் கிடைக்கும் என்று நத்திங் நிறுவனமும் தெரிவித்துள்ளது. 


நத்தின் போன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவி்ல்லை. இருப்பினும், பல்வேறு டெக் தளங்களில் நத்திங் போன் குறித்து சிறப்பு அம்சங்கள் வெளியாகியுள்ளன.

நத்திங் போனின் சிறப்பு அம்சங்கள்

1.    நத்திங் போனில் 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே.
2.    778ஜிபிளஸ் சிப்செட் கொண்டுள்ள ஸ்நாப்டிராகன்
3.    கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு 
4.    ஆன்ட்ராய்ட் 12 வெர்ஸன் நந்திங் போனில் இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கான அப்டேட்களும் கிடைக்கும்
5.    நத்திங் போனில் 50 மெகாபிக்ஸலைக் கொண்ட 2 கேமிராக்கள் உள்ளன. 16மெகாபிக்ஸல் கொண்ட செல்பி கேமிராவும் முன்பக்கத்தில் உள்ளது
6.    4500 மெகாஹெட்ஸ் பேட்டரி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர் வசதியும் உள்ளது.
7.    8ஜிபி ரேம், 12 ஜிபி ஆகிய இரு வேரியன்டகளில், 128ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி ஸ்டோரேஜ்களில் நத்திங் போன் கிடைக்கிறது

click me!