விரைவில் வெளியாகும் ரெனோ 8 சீரிஸ்.... அசத்தல் டீசர் வெளியிட்ட ஒப்போ...!

By Kevin KaarkiFirst Published Jul 12, 2022, 2:23 PM IST
Highlights

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

ஒப்போ நிறுவனம்  இந்திய சந்தையில் ரெனோ 8 சீரிஸ் - ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை ஜூலை 18 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. அந்த வகையில் இரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதையும் படியுங்கள்:  ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அசத்தல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

இந்த நிலையில், ரெனோ 8 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் மற்றும் லிக்விட் கூலிங் விவரங்களை ஒப்போ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன் படி ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர்கள் வழங்கப்படுகிறது. ரெனோ 8 மாடலில் புதிய டிமென்சிட்டி 1300 பிராசஸரும், ஒப்போ ரெனோ 8 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

இதையும் படியுங்கள்: வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் டேபில் ஃபேன் அறிமுகம்... சியோமி அதிரடி...!

ஒப்போ ரெனோ 8 ப்ரோ: 

ஒப்போ ரெனோ 8 ப்ரோ மாடலில் வழங்கப்பட இருக்கும் டிமென்சிட்டி 8100 ஆக்டா கோர் பிராசஸர் ஆகும். இதில் 2.85 ஜிகாஹெர்ட்ஸ் ARM கார்டெக்ஸ் A78 சூப்பர் கோர்கள் மற்றும் ARM மாலி G610 MC6 கிராபிக்ஸ் உள்ளது. மேலும் இதில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் 5.0 கேமிங் தொழில்நுட்பம் உள்ளது. இது அதிநவீன AI-VR கிராபிக்ஸ் வசதியை வழங்குகிறது. இத்துடன் வைபை, ப்ளூடூத் தொழில்நுட்பம், ப்ளூடூத் LE ஆடியோ தொழில்நுட்பம், டூயல் லின்க் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ ஆடியோ வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்: ஐபோன் 14 சீரிஸ் இந்த தேதியில் தான் வெளியாகுதாம்... இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!

ஒப்போ ரெனோ 8:

ரெனோ 8 மாடலில் வழங்கப்பட இருக்கும் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸரில் புதிய 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் CPU உள்ளது. இத்துடன் 3 ஜிகாஹெர்ட்ஸ் ARM கார்டெக்ஸ் A78 உள்ளது. இத்துடன் ஹைப்பர் என்ஜின் 5.0 கேமிங் தொழில்நுட்பம் உள்ளது. இந்த பிராசஸரில் A1 வீடியோ டிகோடிங் செய்யும் ஹார்டுவேர் உள்ளது. 

பேட்டரியை பொருத்தவரை இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 4500mAh பேட்டரி மற்றும் ஒப்போ 80 வாட் சூப்பர் வூக் பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 11 நிமிடங்களே ஆகும். இதில் வழங்கப்படும் பேட்டரியை 1600-க்கும் அதிக முறை சார்ஜ் செய்த பின்பும், பேட்டரி ஆரோக்கியம் 80 சதவீதத்தில் இருக்கும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.

click me!