வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் டேபில் ஃபேன் அறிமுகம்... சியோமி அதிரடி...!

By Kevin Kaarki  |  First Published Jul 11, 2022, 3:03 PM IST

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த டேபில் ஃபேன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக சாதனம் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஸ்மார்ட்போனோ அல்லது அணியக் கூடிய சாதனமோ இல்லை. மாறாக இது ஸ்மார்ட் வீடுகளுக்கான ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 ஆகும். பெயருக்கு ஏற்றார் போல் இது மின்விசிறி தான். ஆனால் இது வழக்கமான மின்விசிறி இல்லை.

இதையும் படியுங்கள்: ஐபோன் 14 சீரிஸ் இந்த தேதியில் தான் வெளியாகுதாம்... இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!

Tap to resize

Latest Videos

undefined

இந்த மின்விசிறி, மிகவும் அமைதியானது மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்தது என சியோமி நிறுவனம் அறிவித்து உள்ளது. இதில் உள்ள BLDC மோட்டார் மின் விசிறி மிகவும் அமைதியாக இயங்க செய்கிறது. மேலும் இந்த மின் விசிறியில் நேச்சுரல் பிரீஸ் மோட் உள்ளது. இதன் டிசைன் மிகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 7+5 விங் வடிவ பிளேடு உள்ளன. புதிய ஸ்மார்ட் ஃபேன் மூன்று கோணங்களில் காற்றை வீசும். மேலும் இதனை 100 வெவ்வேறு வேகங்களில் இயக்கும் வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்: 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்...!

தோற்றத்தில் வழக்கமான மின் விசிறி போன்றே காட்சி அளிக்கிறது. இதன் ஒட்டுமொத்த எடை 3 கிலோ மட்டுமே. ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 மாடலில் பயனர் விருப்பத்திற்கு ஏற்ப பொருத்திக் கொள்ளலாம். இதன் மிக குறைந்த சத்தம் 30.2db மட்டும் தான், அதிகபட்சமாக 55.8db அளவு வெளிப்படுத்தும். மேலும் இந்த மின்விசிறியல் உள்ள ஸ்மார்ட் அல்காரிதம் கொண்டு இயற்கை காற்றோட்டத்தை போன்று இயங்க வைக்கலாம். 

இதையும் படியுங்கள்: நத்திங் போன் (1) இந்திய விலை... ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்டால் லீக் ஆன முக்கிய தகவல்...!

சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 மாடலில் 100 ஸ்பீடு லெவல்கள் உள்ளன. இவற்றை சியோமி ஹோம் ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். மேலும் இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் அல்லது அமேசான் அலெக்சா மூலமாகவும் இந்த மின் விசிறியை இயக்க முடியும். அதாவது ஸ்மார்ட் ஹோம் ஹப்களுடன் இந்த மின் விசிறியை இணைத்துக் கொண்டால் அதன் பின் எளிமையாக இயக்கலாம். 

புதிய சியோமி  ஸ்மார்ட் மின் விசிறியை ஆறு வழிகளில் மிக எளிமையாக கழற்ற முடியும். இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 மாடலின் விலை 5 ஆயிரத்து 999 என நிர்ணண் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ விற்பனை மையத்தில் நடைபெற்று வருகிறது.

click me!