ஐபோன் 14 சீரிஸ் இந்த தேதியில் தான் வெளியாகுதாம்... இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Jul 11, 2022, 2:29 PM IST

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய 2022 ஐபோன் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஐபோன் 14 சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்...!

Tap to resize

Latest Videos

undefined

புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் புகைப்படங்களை டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கிறார். அதன் படி இரு மாடல்கள் 6.1 இன்ச் டிஸ்ப்ளே, இரு மாடல்களில் 6.7 இன்ச் பேனல்கள் உள்ளன. இதன் ப்ரோ மாடல்களில் பெரிய கேமரா பம்ப் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. மேம்பட்ட 48MP கேமரா வழங்கப்படுவதால் கேமரா பம்ப் பெரிதாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்: நத்திங் போன் (1) இந்திய விலை... ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்டால் லீக் ஆன முக்கிய தகவல்...!

இந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் மட்டும் இன்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: சியோமி 12 சீரிசில் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

நான்கு மாடல்கள்:

முன்னதாக வெளியான மற்றொரு தகவல்களில் ஐபோன் 14 சீரிசில் நான்கு மாடல்கள் - ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 பிளஸக் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இவற்றில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஒரே ஸ்கிரீன் அளவை கொண்டு இருக்கும். ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஒரே அளவு டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

மேலும் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் பேனல்கள், ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மெட்டல் மோல்ட்ஸ் வெளியிட்ட தகவல்களிலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் தான் வெளியாகி இருந்தது. 

பெரிய கேமரா மாட்யுல்:

மேலும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை விட அளவில் பெரிய கேமரா மாட்யுல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட இருக்கும் 48MP கேமரா மாட்யுல் அளவு 25 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆப்பிள் வல்லுனரான மின் சி கீயூ தெரிவித்து இருந்தார். 

click me!