நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட் மூலம் லீக் ஆகி இருக்கிறது.
நத்திங் போன் (1) மாடல் நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய நித்திங் ஸ்மார்ட்போனிற்கான விளம்பரங்கள் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளன. இணையத்தில் வெளியான விடயங்கள், லீக் ஆன விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீசர்கள் என புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி ஏராளமான தகவல்கள் கிடைத்து விட்டன.
இதையும் படியுங்கள்: சியோமி 12 சீரிசில் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
undefined
இந்த நிலையில், புதிய நத்திங் போன் (1) மாடலின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் நத்திங் போன் (1) மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்தை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.
இதையும் படியுங்கள்: சார்ஜர் இன்றி விற்பனைக்கு வரும் நத்திங் போன் (1).... வீடியோவில் வெளியான தகவல்..!
ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான ராகுல் ஷா வெளியிட்டு இருக்கும் விவரங்களில் நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் இந்திய விலை ரூ. 39 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 34 ஆயிரத்து 999 என துவங்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் ட்விட்டர் பதிவுடன் ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் ஸ்மார்ட்போன் வெள்ளை நிறம் கொண்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: அம்பானி உடன் போட்டி... 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம்...!
பேஸ் வேரியண்ட்:
டீசர்களில் இந்த ஸ்மார்ட்போனின் பிளாக் நிறத்திலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து நிறங்களின் விலையும் ஒன்றாகவே இருக்கும். நத்திங் போன் (1) மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் இது தானா அல்லது இதற்கு பேஸ் வேரியண்ட் ஏதும் இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை நத்திங் போன் (1) மாடலின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் இருக்கும் பட்சத்தில் இதன் விலை சற்றே குறைவாக இருக்கும்.
ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடலாக நத்திங் போன் (1) இருக்கிறது. டீசர் மற்றும் போஸ்டர்களின் படி நத்திங் போன் (1) மாடல் எப்படி காட்சி அளிக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வித்தியாசமான எல்இடி லைட்டிங் உள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (1) மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 4500mAh பேட்டரி மற்றும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன், கூடுதலாக மற்றொரு சென்சார் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படலாம்.
நத்திங் போன் (1) மாடலின் வெளியீடு இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு துவங்க இருக்கிறது. அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நேரலை செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்விலேயே ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்கள் தெரியவரும்.