சார்ஜர் இன்றி விற்பனைக்கு வரும் நத்திங் போன் (1).... வீடியோவில் வெளியான தகவல்..!

By Kevin KaarkiFirst Published Jul 10, 2022, 12:45 PM IST
Highlights

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீடு மிக விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாக உள்ளது.

நத்திங் போன் (1) மாடலின் வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரங்கள் வெளியாகி விட்டன. இந்த நிலையில், நத்திங் போன் (1) ரீ-டெயில் பாக்ஸ் எப்படி காட்சி அளிக்கும் என்பதை அம்பலப்படுத்தும் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோவில் நத்திங் போன் (1) பாக்ஸ் மிக மெல்லியதாக இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: அம்பானி உடன் போட்டி... 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம்...!

ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களில் நத்திங் போன் (1) மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்பட்டு வந்தது. தற்போது நத்திங் போன் (1) மாடலின் ரிடெயில் பாக்ஸ் புகைப்படம் இதே தகவலை கிட்டத்தட்ட உண்மை தான் என உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. புதிய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பட்ஜெட் விலையில் 5ஜி போன்கள் அறிமுகம்... கூடவே சலுகையும் அறிவித்து இன்பினிக்ஸ் அதிரடி..!

நத்திங் போன் (1) மாடலின் வீடியோ படி இதன் ரீ-டெயில் பாக்ஸ் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதில் துளியும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. இந்த பாக்ஸ்-இல் அச்சிடப்பட்டு இருக்கும் எழுத்துக்களுக்கான மை கூட சோயாபீன் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: தள்ளுபடி விலையில் சாம்சங் சாதனங்கள்... மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

முன்னதாக நத்திங் நிறுவனம் டிக்டாக்கில் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், நத்திங் போன் (1) மாடலில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீடியோவில் ஸ்மார்ட்போனின் இன் ஸ்கிரீன் சென்சார் எவ்வளவு வேகமாக ஸ்மார்ட்போனை அன்லாக் செய்கிறது என்பதை பார்க்க முடியும். புதிய போன் (1) மாடல் ஜூலை 12 ஆம் தேதி இரு 8.30 மணி அளவில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் நத்தங் போன் (1) மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஆப்லைனை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நத்திங் போன் (1) மாடல் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

நத்திங் போன் (1) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.55 இன்ச் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர்
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 50MP பிரைமரி கேமரா
- 16MP வைடு ஆங்கில் லென்ஸ்
- 16MP செல்பி கேமரா
- 4500mAh பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

click me!