இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை வழங்குவதற்கான ஏலம் ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. இந்த நிலையில், 5ஜி ஏலத்தில் அதானி குழுமமும் பங்கேற்பதாக தெரிவித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: பட்ஜெட் விலையில் 5ஜி போன்கள் அறிமுகம்... கூடவே சலுகையும் அறிவித்து இன்பினிக்ஸ் அதிரடி..!
“இந்திய சந்தையில் அடுத்த தலைமுறை 5ஜி சேவைகள் தொடங்குவதற்கான பணிகள் விறுவறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலத்தில் நாங்களும் பங்கேற்க இருக்கிறோம்,” என அதானி குழுமம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: தள்ளுபடி விலையில் சாம்சங் சாதனங்கள்... மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!
“விமான நிலையம், துறைமுகங்கள், தளவாடங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம், வினியோகம் மற்றும் பல்வேறு இதர உற்பத்தி பணிகளில் மேம்பட்ட இணைய பாதுகாப்பு கொண்ட தனியார் இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்து இருக்கிறோம்,” என அதானி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: உடனே ரூ. 50 வேண்டுமா? வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வோடபோன் ஐடியா அறிவிப்பு..!
கடும் போட்டி:
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தற்போது அதானி குழுமமும் பங்கேற்க இருப்பதை அடுத்து அதானி மற்றும் அம்பானி இடையே போட்டி சூழல் உருவாகி இருக்கிறது. இது மட்டும் இன்றி டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாளராக அமைகிறது. டெலிகாம் சந்தையில் அதானி களமிறங்கும் விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்க வேண்டும்.
இந்த ஏலத்தில் 20 ஆண்டுகள் வேலிடிட்டி கொண்ட 72097.85 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஏலத்தில் 600 மெகாஹெர்ட்ஸ், 700 மெகாஹெர்ட்ஸ், 800 மெகாஹெர்ட்ஸ், 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ், 2300 மெகாஹெர்ட்ஸ், மிட் 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் ஹை 26 ஜிகாஹெர்ட்ஸ் பிரீக்வன்சி பேண்ட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
அதானியின் இலக்கு:
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி அதானி குழுமம் சார்பில் சி பேண்ட் (3.3-6.67 ஜிகாஹெர்ட்ஸ்) 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்க விண்ணப்பத்து இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ, முதற்கட்ட நகரங்கள், ஏ பிரிவு வட்டாரங்களில் ஸ்பெக்ட்ரத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவும்.
தற்போதைய 5ஜி ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இடையே கடும் போட்டி உருவாகி இருந்த நிலையில், தற்போது அதான் குழுமத்தின் வரவு காரணமாக ஏலத்தில் போட்டி மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.