சாம்சங் சாதனங்களை வாங்கும் மாணவர்கள் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை பெற முடியும்.
இந்திய சந்தையில் முன்னணி மின்சாதன நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங் இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது சாதனங்கள் விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை வாங்கும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
இதையும் படியுங்கள்: உடனே ரூ. 50 வேண்டுமா? வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வோடபோன் ஐடியா அறிவிப்பு..!
இந்த வரிசையில் சாம்சங் நிறுவனமும் இணைந்து இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் சாதனங்களை வாங்கும் மாணவர்கள் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை பெற முடியும். இந்த சலுகையின் கீழ் மாணவர்கள் சாம்சங் நிறுவன சாதனங்களை சற்ற குறைந்த விலையில் வாங்குவதோடு இதர பலன்களையும் பெற முடியும். டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக சாம்சங் தெரிவித்து உள்ளது.
இதையும் படியுங்கள்: விற்பனைக்கு வந்தது ரிய்லமி C35 புது வேரியண்ட்... விலை எவ்வளவு தெரியுமா?
சாம்சங் மாணவர்கள் சலுகையில் பயன்பெறுவது எப்படி?
மாணவர்கள் சாம்சங் நிறுவனத்தின் Student Advantage வலைதளம் (https://www.samsung.com/in/microsite/student-advantage/) அல்லது அருகாமையில் உள்ள சாம்சங் ஸ்டோருக்கு நேரில் சென்று அடையாள அட்டையை கொடுத்து திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். சாம்சங் வலைதளத்தில் பலன்களை பெற யுனிடேஸ் (Unidays) இல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: மேக்புக் ஏர் M2 வாங்க போறீங்களா? இன்றே முன்பதிவு செய்வது எப்படி?
இவ்வாறு செய்த பின் சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் கேலக்ஸி S21 FE துவங்கி அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டும் இன்றி கேலக்ஸி டேப் A சீரிஸ், அணியக்கூடிய சாதனங்கள், லேப்டாப் மற்றும் சாம்சங் மாணிட்டர்கள் என பல்வேறு சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகளை பெற முடியும்.
சலுகை விவரங்கள்:
1 - ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கும் போது மாணவர்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது சாம்சங் ஃபிளாக்ஷிப் மற்றும் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் கிடைக்கும் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
இதில் கேலக்ஸி S22, கேலக்ஸி s22 பிளஸ், கேலக்ஸி s22, கேலக்ஸி S20 FE மற்றும் கேலக்ஸி S21 FE மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மட்டும் இன்றி கேலக்ஸி A73 5ஜி, கேலக்ஸி A53 5ஜி, கேலக்ஸி A33 5ஜி, கேலக்ஸி A23 மற்றும் கேலக்ஸி A13 போன்ற கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும்.
2 - லேப்டாப் வாங்கும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது கேலக்ஸி புக் கோ, கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 360, கேலக்ஸி புக் 2 ப்ரோ, கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
3 - டேப்லெட் மாடலை வாங்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். இது கேலக்ஸி டேப் S8 மற்றும் கேலக்ஸி டேப் A8 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
4 - மாணிட்டர்களை வாங்கும் போதும் ஐந்து சதவீதம் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் கேமிங் மாணிட்டர்களான G5 சீரிஸ், G7 சீரிஸ், G9 சீரிஸ், வளைந்த FHD மாணிட்டர், CF39 சீரிஸ் உள்ளிட்டவைகளுக்கு தள்ளுபடி பெற முடியும்.
5 - அணியக்கூடிய சாதனங்களை வாங்கும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இது கேலக்ஸி வாட்ச் 4, கேலக்ஸி பட்ஸ் ப்ரோ போன்ற மாடல்களுக்கு பொருந்தும்.