மொபைல் ரிசார்ஜ் செய்ய ஏராளமான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன. பயனர்களும் இவற்றை கொண்டே ரிசார்ஜ்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வோடபோன் ஐடியா நிறுவனம் பயனர்கள் தனது மொபைல் செயலியை பயன்படுத்த வைக்கும் நோக்கில் சன்மானம் வழங்க முடிவு செய்து இருக்கிறது. வி செயலியை டவுன்லோட் செய்வோருக்கு ரூ. 50 கேஷ்பேக் மற்றும் 30 ரிவார்டு காயின்களை வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. இதற்கு பயனர்கள் வி செயலியை டவுன்லோட் செய்து அதிலேயே ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள்: விற்பனைக்கு வந்தது ரிய்லமி C35 புது வேரியண்ட்... விலை எவ்வளவு தெரியுமா?
மொபைல் ரிசார்ஜ் செய்ய ஏராளமான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன. பயனர்களும் இவற்றை கொண்டே ரிசார்ஜ்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக வி நிறுவனம் தனது பயனர்கள் ரிசார்ஜ் செய்ய சொந்த மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறது. வி செயலியை கொண்டு வோடபோன் ஐடியா நம்பர்களை மட்டும் ரிசார்ஜ் செய்ய முடியும்.
இதையும் படியுங்கள்: மேக்புக் ஏர் M2 வாங்க போறீங்களா? இன்றே முன்பதிவு செய்வது எப்படி?
ஏன் இந்த நிலை?
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது மொபைல் செயலியை வளர்க்க முதலீடு செய்து வருகிறது. மேலும் இந்த செயலியை தூப்பர் ஆப்-ஆக மாற்ற முடிவு செய்து உள்ளது. சூப்பர் ஆப் வடிவில் வோடபோன் ஐடியா நிறுவனம் பயனரின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் ஒற்றை பிளாட்பார்ம் ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து இருக்கிறது. செயலியில் இருந்த படி பயனர்களுக்கு பாடல்களை வழங்குவதற்காக வோடபோன் ஐடியா நிறுவனம் ஏராளமான கூட்டணியை அமைத்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? புது ஸ்மார்ட்போனில் அதிரடி காட்டிய லாவா!
பாடல்கள் மட்டும் இன்றி செயலியில் வேலை வாய்ப்பு, கேம்கள் என ஏராளமான இதர வசதிகளை வழங்கவும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சேவைகளை மேம்படுத்தும் பணிகளிலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மொபைல் செயலியில் அதிக பயனர்களை ஈர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்திக் கொள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் முடிந்த வரை அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி அதில் இருந்து வருவாய் ஈட்ட முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் மொபைல் செயலி மூலமாகவும் வருவாய் ஈட்டும் முயற்சிகளை வோடபோன் ஐடியா நிறுவனம் துவங்கி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் தங்களின் மொபைல் செயலிகளில் ஏராளமான சேவைகளை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்து உள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வங்கி அனுபவத்தையே வழங்கி வருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை கொண்டு வருவாய் ஈட்ட கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வரும் நாட்களில் வோடபோன் ஐடியா வரிசையில் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் இதே போன்ற சன்மானங்களை வழங்குவது பற்றி அறிவிக்கலாம்.