மேக்புக் ஏர் M2 வாங்க போறீங்களா? இன்றே முன்பதிவு செய்வது எப்படி?

By Kevin KaarkiFirst Published Jul 8, 2022, 11:59 AM IST
Highlights

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் மாடல் மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

ஆப்பிள் நஇறுவனம் மேக்புக் ஏர் M2 மாடலின் விற்பனை ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இத்துடன் புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் M2 மாடலுக்கான் முன்பதிவு இன்று (ஜூலை 08) மாலை 5.30 மணிக்கு துவங்க இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? புது ஸ்மார்ட்போனில் அதிரடி காட்டிய லாவா!

மேக்புக் ஏர் 2022 மாடலில் முற்றிலும் புதிய ஆப்பிள் M2 சிலிகானஅ பிராசஸர், அதிகபட்சம் 24ஜிபி யுனிஃபைடு மெமரி, 13.6 இன்ச் ஸ்கிரீன், 1080 பிக்சல் வெப் கேமரா, குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம், மேக் ஓ.எஸ். மாணிடெரி, அதிகபட்சம் 18 மணி நேர பேக்கப், ஆப்ஷனல் 35 வாட் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், மேக்சேப் சப்போர்ட் கொண்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் M2 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: ரியல்மி தார் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

மாணவர்களுக்கு மட்டும் இதை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் பேக் டு ஸ்கூல் (Back to School) திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதிய மேக்புக் ஏர் M2 மாடலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இது மட்டும் இன்றி மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்...!

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் மாடல் மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஜூலை 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

ஆப்பிள் மேக்புக் ஏர் M2 மாடலை முன்பதிவு செய்வது எப்படி?

இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் மேக்புக் லேப்டாப் மாடலை ஆப்பிள் நிறுவனத்திடம் நேரடியாகவோ அல்லது ஆப்பிள் அங்கீகரித்து இருக்கும் விற்பனையாளர்களிடமோ வாங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை ஆப்பிள் வலைதளத்தில் நேரடியாக ஆப்பிள் மேக்புக் ஏர் M2 மாடலை வாங்க முடிவு செய்து இருந்தால், இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம். 

1 - முதலில் ஆப்பிள் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும். ஏற்கனவே ஆப்பிள் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிள் ஐடி உருவாக்க இனி உங்களின் முழு பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி,  மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். முன்பதிவு செய்யும் போது ஆப்பிள் ஐடி கேட்கப்படும். இதன் காரணமாக முன்கூட்டியே ஆப்பிள் ஐடி உருவாக்கிக் கொள்வது நல்லது.

2 - ஆப்பிள் அக்கவுண்ட்-இல் கார்டு தகவல்கள் மற்றும் டெலிவரி செய்யப்பட வேண்டிய முகவரி உள்ளிட்டவைகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

3 - ஆப்பிள் ஸ்டோர் லின்க்-இல் இருந்து நீங்கள் வாங்க விரும்பும் மாடலை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் நிறம், மெமரி கான்ஃபிகரேஷன் போன்றவற்றை தேர்வு செய்து விட வேண்டும்.

4 - வாங்கும் போது வலைதளத்தில் Add to the bag ஆப்ஷனை தேர்வு செய்து, பின் Review ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்த மாடலை உறுதிப்படுத்த வேண்டும். இங்கு ஆப்பிள் கேர் பிளல், கிஃப்ட் பார்சல் உள்ளிட்டவைகளை நீங்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்து கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. 

5 - டெலிவரி முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை ரெகுலர் அல்லது எக்ஸ்பிரஸ் என இரு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் உங்களின் முகவரி மற்றும் தொர்பு விவரங்களை பதிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து பேமண்ட் செய்ய முற்படலாம். இந்த சமயத்தில் சரியான விவரங்களை பதிவிட்டு, பேமண்ட் செய்ய வேண்டும். 

click me!