ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C35 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி C35 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வேரியண்ட் அதிக ரேம் மற்றும் மெமரி வழங்குகிறது. ரியல்மி C35 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டு இருக்கிறது. புது ரேம் மற்றும் அதிக மெமரி தவிர ரியல்மி C35 ஸ்மார்ட்போன் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதையும் படியுங்கள்: மேக்புக் ஏர் M2 வாங்க போறீங்களா? இன்றே முன்பதிவு செய்வது எப்படி?
undefined
புதிய ரியல்மி C35 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், யுனிசாக் T616 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, VGA டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? புது ஸ்மார்ட்போனில் அதிரடி காட்டிய லாவா!
ரியல்மி C35 அம்சங்கள்:
- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 180Hz டச் சாம்ப்லிங் ரேட்
- 2GHz UNISOC T616 ஆக்டா கோர் 12nm பிராசஸர்
- மாலி-G57 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி UFS 2.2 மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ ஆர் எடிஷன்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- VGA B&W போர்டிரெயிட் சென்சார், f/2.8
- 8MP செல்பி கேமரா, f/2.0
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப் சி
- 5,000 mAh பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
இதையும் படியுங்கள்: ரியல்மி தார் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
விலை விவரங்கள்:
ரியல்மி C35 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் குளோயிங் பிளாக் மற்றும் குளோயிங் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ரியல்மி வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.