பட்ஜெட் விலையில் 5ஜி போன்கள் அறிமுகம்... கூடவே சலுகையும் அறிவித்து இன்பினிக்ஸ் அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published Jul 8, 2022, 3:19 PM IST

இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 12 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ 5ஜி என இரு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 


இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 12 மற்றும் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் மாடல்கள் மே மாத வாக்கில்  அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நோட் 12 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ 5ஜி என இரு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: தள்ளுபடி விலையில் சாம்சங் சாதனங்கள்... மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

Latest Videos

undefined

புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்ப்லிங் ரேட், வைட்வைன் எல்1 சான்று பெற்று இருக்கின்றன. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், மீடியாடெக் டார்லின்க் 2.0 தொழில்நுட்பம் உள்ளது. நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 5 ஜிபி ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்: உடனே ரூ. 50 வேண்டுமா? வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வோடபோன் ஐடியா அறிவிப்பு..!

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 6nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி( நோட் 12 5ஜி) 
- 8ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி (நோட் 12 ப்ரோ 5ஜி)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட் 
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் XOS 10.6
- நோட் 12 5ஜி - 50MP பிரைமரி கேமரா, f/1.6, குவாட் எல்இடி பிளாஷ்
- 2MPடெப்த் சென்சார், ஏஐ லென்ஸ்
- நோட் 12 ப்ரோ 5ஜி - 108MP பிரைமரி கேமரா, f/1.7, குவாட் எல்இடி பிளாஷ்
- 2MP டெப்த் சென்சார்,
- 2MP மேக்ரோ கேமரா
- 16MP செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

இதையும் படியுங்கள்: விற்பனைக்கு வந்தது ரிய்லமி C35 புது வேரியண்ட்... விலை எவ்வளவு தெரியுமா?

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் போர்ஸ் பிளாக் மற்றும் போர்ஸ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இரு ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் ஜூலை 14 மற்றும் ஜூலை 15 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். 

click me!