200 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்...!

By Kevin Kaarki  |  First Published Jul 11, 2022, 1:52 PM IST

ஐகூ நிறுவனம் உலகின் முதல் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.


ஐகூ நிறுவனம் ஐகூ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐகூ 10 சீரிசில் வென்னிலா ஐகூ 10 மற்றும் ஐகூ 10 ப்ரோ மாடல்கள் இடம்பெற்று உள்ளது. புதிய ஐகூ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை 19 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டுக்கு முன் ஐகூ 10 சீரிஸ் மாடல்களில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என ஐகூ அறிவித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்: நத்திங் போன் (1) இந்திய விலை... ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்டால் லீக் ஆன முக்கிய தகவல்...!

Latest Videos

undefined

அந்த வகையில் உலகின் அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும். ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. ஐகூ ஸ்மார்ட்போனில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த தகவல் உண்மையாகி இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: சியோமி 12 சீரிசில் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை எத்தனை நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், தற்போதைய தகவல்களின் படி 200 வாட் பாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனை 0 முதல் 63 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்: சார்ஜர் இன்றி விற்பனைக்கு வரும் நத்திங் போன் (1).... வீடியோவில் வெளியான தகவல்..!

ஐகூ 10 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.78 இன்ச் 2K+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
- 16 ஜிபி LPDDR5/LPDDRX ரேம்
- அதிகபட்சம் 512 ஜிபி UFS3.1 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ்.
- 50MP பிரைமரி கேமரா
- 50MP அல்ட்ரா வைடு கேமரா
- 14.6MP டெலிபோட்டோ கேமரா
- 32MP செல்பி கேமரா
- 4550mAh பேட்டரி
- 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 

click me!