சிஸ்கா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி FMEG பிராண்டு சிஸ்கா குழுமம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. சிஸ்கா SW300 போலா் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் உடல்நலன் சார்ந்த அக்கறை கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் டேபில் ஃபேன் அறிமுகம்... சியோமி அதிரடி...!
புதிய சிஸ்கா SW300 போலார் ஸ்மார்ட்வாட்ச் 1.32 இன்ச் அல்ட்ரா வியூ IPS டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 37 ஸ்போர்ட்ஸ் மோட்கள், GPS என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடனம் 200-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், கிரவுன் கீ உள்ளது. இதை கொண்டு வாட்ச் ஃபேஸ்கள் இடையே ஸ்கிரால் செய்ய முடியும். IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டு இருக்கும் சிஸ்கா SW300 போலார் ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஐபோன் 14 சீரிஸ் இந்த தேதியில் தான் வெளியாகுதாம்... இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!
இந்த ஸ்மார்ட்வாட்ச் ட்ரூ வயர்லெஸ் கனெக்ஷன் வசதி உள்ளது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் அல்லது ப்ளூடூத் இயர்போனுடன் கனெக்ட் செய்து ஸ்மார்ட்வாட்ச் இல்லாமலேயே ஆப்லைன் மியூசிக் அனுபவத்தை பெற முடியும். இவை தவிர வழக்கமான ஃபிட்னஸ் அம்சங்களான ஹார்ட் ரேட், ஸ்லீப், மாத விடாய் சுழற்சி, SpO2 மற்றும் ஹேண்ட் சானிடைசேஷன் மாணிட்டர் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்...!
இத்துடன் நோட்டிபிகேஷன், ஸ்டாப் வாட்ச், கேமரா, மியூசிக் கண்ட்ரோல் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் சிஸ்கா ஸ்போர்ட்ஸ் ஃபிட் செயலியில் சின்க் செய்யப்பட்டு விடும். இத்துடன் பில்ட் இன் ஸ்டோரேஜ் மூலம் பாடல்களை ஆப்லைனில் ஸ்டோர் செய்து கொண்டு கேட்க முடியும். இதில் அதிகபட்சமாக 100 பாடல்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
சிஸ்கா SW300 போலார் ஸ்மார்ட் வாட்ச் அம்சங்கள்:
- வட்ட வடிவ டையல்
- சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது
- தொடுதிரை வசதி
- 1.3 இன்ச் IPS எல்சிடி 360x360 பிக்சல் டிஸ்ப்ளே
- 512MB வரையிலான மெமரி
- டூயல் ப்ளூடூத் 5.0 மற்றும் ப்ளூடூத் 3.0
- ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், பீடோமீட்டர் சென்சார்
- அக்செல்லோமீட்டர் மற்றும் ஸ்லீப் மாணிட்டர் சென்சார்
- கால், மெசேஜ், இமெயில் மற்றும் செயலிகளுக்கான நோட்டிபிகேஷன்
- 120 நிமிட சார்ஜிங் நேரம்
- காந்த சக்தி கொண்ட சார்ஜிங் கேபிள்
- ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஓ.எஸ். 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஓ.எஸ். சப்போர்ட்
- 65 கிராம் எடை
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய சிஸ்கா SW300 போலார் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. மேலும் கிளவுட் கிரெ, ஸ்பெக்ட்ரா புளூ மற்றும் ஓசன் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.