ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி.. இணையத்தில் லீக் ஆன புது விவரங்கள்...!

By Kevin Kaarki  |  First Published Jul 15, 2022, 2:29 PM IST

ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 


ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை ஒப்போ நிறுவனத்தின் புதிய பிரீமியம் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆகும். இந்த சீரிசில் ஒப்போ ரெனோ 8 5ஜி மற்றும் ரெனோ 8 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

இதையும் படியுங்கள்: நத்திங் போன் (1) VS மோட்டோரோலா எட்ஜ் 30 - அம்சங்கள், விலை ஒப்பீடு.... எது மாஸ் தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

ரெனோ 8 ப்ரோ 5ஜி மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கிறது. இதன் முன்புறம் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. எனினும், டிஸ்ப்ளேவில் இருக்கும் பன்ச் ஹோல் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய கேமரா பம்ப் உள்ளது. இதில் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: பில்ட்-இன் MP3 பிளேயர் கொண்ட நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

கேமராவை பொருத்தவரை ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ யூனிட் உள்ளது. இத்துடன் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மீடியாடெக் பிராசஸர், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான பலன்களுடன் புது நோக்கியா போன் அறிமுகம்...!

ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர்
- LPDDR5 ரேம்
- UFS3.1 மெமரி
- 4500mAh பேட்டரி
- 80 வாட் பாஸ்ட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒப்போ கலர் ஒ.எஸ். 12

ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிளேஸ்டு கிரீன் மற்றும் கிளேஸ்டு பிளாக் நிற வேரியண்ட்களில் கிடைக்கும் ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் ஷிமெரிங் கோல்டு மற்றும் ஷிமெரிங் பிளாக் நிறங்களில் கிடைக்கும். இந்திய சந்தையில் ஜூலை 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ஒப்போ பேட் ஏர் டேப்லெட் மற்றும் ஒப்போ என்கோ X2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

click me!