Volvo XC40 price: நாளை அறிமுகமாகும் வால்வோxc40 பேட்டரி கார்: 400 கி.மீ வரை மைலேஜ்: அம்சங்கள் என்ன?

By Pothy Raj  |  First Published Jul 26, 2022, 12:44 PM IST

இந்திய பேட்டரி கார் சந்தையை கலக்க வரும் வால்வோ நிறுவனத்தின் xc40(volvoxc40 suv) ரீசார்ஜ் எஸ்யுவி கார், நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இந்திய பேட்டரி கார் சந்தையை கலக்க வரும் வால்வோ நிறுவனத்தின் xc40(volvoxc40 suv) ரீசார்ஜ் எஸ்யுவி கார், நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரையடுத்த, ஹொசகோட் தொழிற்சாலையில் வால்வோ எஸ்சி40 ரக கார் அசெம்பிள் செய்யப்பட்டு நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது. ஏற்கெனவே இந்தியச்சந்தையில் இருக்கும் சொகுசு எஸ்யுவி மாடல்கார்களுக்கு போட்டியாக நிச்சயம் வால்வோ கார் இருக்கும் என நம்பலாம்.

Latest Videos

undefined

சிட்ரான் சி3 கார் இந்தியாவில் அறிமுகமானது: விலை என்ன? சிறப்பு அம்சங்கள் என்ன?

வால்வோ எக்ஸ்சி40 கார் எப்படி

வால்வோ எக்ஸ்சி40 காரைப் பொறுத்தவரை அதன் முன்புறம் கிரில்லுக்குப் பதிலாக வெள்ளை நிற பம்பர்,பேனல் பொருத்தப்பட்டு, வால்வோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. காரின் அனைத்து டயர்களும் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளன. 

அம்பானி உடன் போட்டி... 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம்...!

காரின் கேபின் அம்சங்கள்

12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தரப்பட்டுள்ளது, டச்ஸ்க்ரீன் இன்போடெய்ன்மென்ட், பனோரோமிக் சன்ரூப், 2 ஜோன் க்ளேமேட் கன்ட்ரோல், லெதர் சீட்டுகள், அப்ஹோல்ஸ்ட்ரி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பவர் டிரைவர் சீட். காரில் 100 சதவீதம் லெதர் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
150கிலோவாட் 2 மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால், 402 பிஹெச்பி  உச்சகட்டமாக 660 என்எம் உற்பத்தியாகும். 78 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், ஒருமுறை சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 418 கி.மீ மைலேஜ் கிடைக்கும்.

வேகமாக சார்ஜ் செய்யும் 150 கிலோ டிசி வசதிகள் தரப்பட்டுள்ளதால் 33 நிமிடங்களில் 85 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். வால்வோ பேட்டரி கார் 4.9 வினாடிகளில் 100 கி.மீ வேகம்வரை செல்லக்கூடியது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடிக்காமல் இருக்கனுமா? இதை மட்டும் செய்யாதீங்க...!

வால்வோ எக்ஸ்சி40 எஸ்யுவி கார் நாளை சந்தையில் அறிமுகமாகும்போது, மெர்சடீஸ் பென்ஸ் EQC, ஜாக்குவார் Ipace, விஎம்டபிள்யுix,ஆடி etron, கியா ev6  ஆகிய கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.
 

click me!