ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது கூடுதலாக 17 இடங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. எந்தெந்த இடங்களில் 5ஜி விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
தொலைத்தொடர்பு சேவையில் நம்பர் ஒன் இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜியோ தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்தது. அதன்பிறகு அடுத்தடுத்து, பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் 5ஜ சேவையை முழு வீச்சில் விரிவுபடுத்தியது. 4 மாதங்களில் 250க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் 5ஜி பான் இந்தியா என்ற நோக்கத்துடன், வரும் நாட்களில் ஜியோ அதிக நகரங்களில் 5ஜி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. அண்மையில் ரிஷிகேஷ், சிம்லா என 17 நகரங்களில் 5G ஐ அறிமுகப்படுத்தியதாக ஜியோ அறிவித்துள்ளது. இதேபோல் உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கூடுதல் நகரங்களை சேர்த்துள்ளதாக கூறியுள்ளது. Jio True 5G என அழைக்கப்படும், ஜியோவின் இந்த 5ஜி சேவை இப்போது நாடு முழுவதும் 257 நகரங்களில் கிடைக்கிறது.
தமிழகத்தில் 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ள நகரங்கள்:
தமிழகத்தில் தற்போது 19 நகரங்களில் 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ளன. அவை:
சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர்,காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர்
அண்மையில் 5ஜி விரிவாக்கம் செய்யப்பட்ட நகரங்கள்:
அண்மையில் ஏழு மாநிலங்களில் உள்ள 17 நகரங்களில் ஜியோ தனது 5ஜி சேவைகளை தொடங்கியுள்ளது. அவை: அங்கலேஷ்வர், சவர்குண்ட்லா (குஜராத்), பிலாஸ்பூர், ஹமிர்பூர், நடவுன், சிம்லா (ஹிமாச்சல பிரதேசம்), சிந்த்வாரா, ரத்லாம், ரேவா, சாகர் (மத்திய பிரதேசம்), அகோலா, பர்பானி (மகாராஷ்டிரா), பதிண்டா, கன்னா, மண்டி கோபிந்த்கர் (பஞ்சாப்) , பில்வாரா, ஸ்ரீ கங்காநகர், சிகார் (ராஜஸ்தான்), ஹல்த்வானி-கத்கோடம், ரிஷிகேஷ், ருத்ராபூர் (உத்தரகாண்ட்).
டுவிட்டரைப் போல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கும் விரைவில் கட்டணம்?
ஜியோ வெல்கம் ஆஃபர்
ஜியோ வெல்கம் ஆஃபரில் தற்போதைய 4ஜி டேட்டா பேக்கில் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா உள்ளது. எனவே வெல்கம் ஆஃபரைப் பெற, உங்கள் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டு சிம் இணைப்பில் ரூ. 239க்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இருப்பினும், உங்களிடம் ரூ.239க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள் இருந்தால், ரூ.61 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 5ஜி வெல்கம் ஆஃபருக்கு நீங்கள் தகுதி பெறலாம்.