Redmi Note 12 தொடர் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நோட் 12 சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரெட்மி நோட் 12 சீரிஸ் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகம் விழா குறித்த அழைப்பை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் இந்தியாவில் அறிமுகமாகும். அத்துடன் நோட் 12 சீரிஸில் உள்ள இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Redmi Note 12 Pro Plus ஆனது 200-மெகாபிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட சீனாவில் அறிமுகமான மாடலைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இதற்கு முன்பு சீனாவில் Redmi Note 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுத, தற்போது விற்பனைக்கும் கிடைக்கிறது. அந்த ஸ்மார்ட்போனிலும் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, இன்னும் சில தோற்றங்கள் ஒத்துபோகும் வகையில் உள்ளன.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்த தகவலை ரெட்மி நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போனிலுள்ள அம்சங்கள் தான் இதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிகக்குறைந்த Samsung Galaxy M04 அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
Redmi Note 12 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
டிஸ்ப்ளே: 6.67-இன்ச் Full HD OLED டிஸ்ப்ளே
ரெப்ரெஷ் ரேட்: 120Hz
பிராசசர்: மீடியாடெக் டிமன்சிட்டி 1080 SoC
ரேம்: 12GB LPDDR4X ரேம்
சார்ஜர்: 120W ஃபாஸ்ட் சார்ஜிங்
பேட்டரி சக்தி: 5,000mAh
கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் பின்புற பேனலில் 200 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் கேமரா எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் சீனாவில் அறிமுகமாகன நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனானது, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் CNY 2,099 (சுமார் ரூ. 23,000) என்று விற்பனைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.