ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஆகும்.
ரெட்மி நோட் 11S மாடலுக்கான டீசர்களை தொடர்ந்து தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகமாகிறது. புது ஸ்மார்ட்போனிற்கென ரெட்மி பிரத்யேக வலைப்பக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வெளியீட்டு தேதியை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் மெய்ல் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. எனினும், இதன் அம்சங்கள் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்கள், செவ்வக கேமரா மாட்யூல், எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 90Hz AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் பிராசஸரஹ், எம்.ஐ.யு.ஐ. 13 ஓ.எஸ்., 108MP பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP ஆம்னிவிஷன் மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6GB + 64GB, 6GB + 128GB, மற்றும் 8GB + 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.