சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு 2022 நிகழ்வு தேதி விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை பிப்ரவரி 9 ஆம் தேதி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை சாம்சங் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. இந்த விவரங்களை இன்ஸ்டாகிராமில் நிகழ்வுக்கான விளம்பர பணிகளை மேற்கொள்ள இருப்பவர்கள் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
undefined
வழக்கமாக ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது எஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இம்முறை கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிசை சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதில் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலும் அறிமுகமாகிறது. புதிய சாதனங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகளை சாம்சங் அறிவித்து இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களில் 6.8 இன்ச் வளைந்த குவாட் HD பிளஸ் 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் 12GB+256GB,12GB+512GB மற்றும் 16GB+1TB போன்ற மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP 3x டெலிபோட்டோ லென்ஸ், 10MP 10x டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.