உலகளவில் ஒரு ஜி.பி. மொபைல் டேட்டா விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை பார்ப்போம்.
உலக மக்கள் தொகை எண்ணிக்கையை விட மொபைல் டேட்டா இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுக்க செல்போன்கள் பயன்பாடு பெருமளவு அதிகரித்து வந்தாலும், மொபைல் டேட்டா கட்டணம் ஒவ்வொரு நாடுகளிலும் முற்றிலும் வேறுப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுக்க முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தின. இதற்கு நாடு முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், உலக நாடுகளில் மொபைல் டேட்டா விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுக்க 1 ஜி.பி. மொபைல் டேட்டா கட்டணம் எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அதிக கட்டணம் வசூலிக்கும் முதல் மூன்று நாடுகள்:
1. மலாவியில் ஒரு ஜி.பி. டேட்டா கட்டணத்தின் விலை 27.41 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 2039.86
2. பெனின் நாட்டில் ஒரு ஜி.பி. டேட்டா கட்டணத்தின் விலை 27.22 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 2025.72
3. சட் நாட்டில் ஒரு ஜி.பி. டேட்டா கட்டணத்தின் விலை 23.33 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1736.23
மூன்று நாடுகளை தொடர்ந்து ஏமன் நாட்டில் ஒரு ஜி.பி. டேட்டா விலை 15.98 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,189.24 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போட்ஸ்வானாவில் ஒரு ஜி.பி. டேட்டா விலை 13.87 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,032.21 ஆகும்.
உலகளவில் குறைந்த விலை மற்றும் விலை உயர்ந்த மொபைல் டேட்டா கட்டணங்கள் இடையே 30 ஆயிரம் சதவீதம் வித்தியாசம் கொண்டுள்ளது. சரி மிக குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் நாடுகள் பட்டியலை பார்ப்போம். குறைந்த விலையில் மொபைல் டேட்டா கட்டணம் கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஒரு ஜி.பி. மொபைல் டேட்டா கட்டணம் 0.09 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6.70 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவை தொடர்ந்து இஸ்ரேலில் ஒரு ஜி.பி. டேட்டா விலை 0.11 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 8.19 ஆகும். இதைத் தொடர்ந்து கிர்கிஸ்தான், இத்தாலி மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலும் ஒரு ஜி.பி. டேட்டா விலை மற்ற நாடுகளில் உள்ளதை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.