கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் பிக்சல் வாட்ச் மாடல் மே மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் பிக்சல் வாட்ச் மாடல் மே 26 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பற்றி விவரங்கள் நீண்ட காலமாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இப்படி ஒரு சாதனம் உருவாக்கப்படுவதாக கூகுள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
இணையத்தில் வெளியாகி இருக்கும் சமீபத்திய தகவல்களின் படி கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தி பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு கூகுள் தனது பிக்சல் வாட்ச் மாடலை மே 26 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சந்தை வல்லுநரான ஜான் ப்ரோசர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தேதி எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் அவ்வாறு மாற்றப்பட்டால் அதுபற்றிய தகவலை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
undefined
தற்போது வெளியாகி இருக்கும் தேதியில் தான் கூகுள் தனது I/O டெவலப்பர் நிகழ்வை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதே நிகழ்வின் போதே கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 'ரோஹன்' எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் வாட்ச், ஆப்பிள் வாட்ச் மாடலுக்கு போட்டியாக வெளியிடப்பட இருக்கிறது.
புது வாட்ச் ரெண்டர்களின் படி வட்ட வடிவம் கொண்ட டையல் மற்றும் மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் வாட்ச் மாடலில் சாம்சங் உருவாக்கிய பிரத்யேக சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.