நெட்ஃப்ளிக்ஸ் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் - அட இது தெரியாம போயிடுச்சே!

By Nandhini SubramanianFirst Published Jan 22, 2022, 1:42 PM IST
Highlights

முன்னணி ஒ.டி.டி. தளங்களில் ஒன்றாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்த பயனுள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமான ஒ.டி.டி. தளங்களில் ஒன்றாக இருக்கிறது. சமீப காலமாக தனது பிரபலத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள நெட்ஃப்ளிக்ஸ் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விலை உயர்ந்த சந்தா முறையில் ஒரே சமயத்தில் ஐந்து பேர் தளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்கள் மட்டுமின்றி பயனர்கள் தங்களின் அனுபவத்தை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. ப்ரோஃபைலை லாக் செய்வதில் துவங்கி, வாட்ச் ஹிஸ்ட்ரியை நீக்குவது வரை அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய நெட்ஃப்ளிக்ஸ் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்-ஐ தொடர்ந்து பார்ப்போம். 

வாட்ச் ஹிஸ்ட்ரியை நீக்குவது

தான் எதை பார்க்கின்றனர், எந்தெந்த நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் என்ற விவரங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்ப மாட்டார்கள். நெட்ஃப்ளிக்ஸ்-இல் நீங்கள் எதை பார்க்கின்றீர்கள் என்ற விவரங்களை நீக்க 'அக்கவுண்ட்' -- 'வியூவிங் ஆக்டிவிட்டி' ஆப்ஷன்களில் இருந்து முழு வியூவிங் ஆக்டிவிட்டையையும் நீக்க முடியும். இதற்கு 'ஹைடு ஆல்' பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ப்ரோஃபைலை லாக் செய்வது

உங்கள் ப்ரோஃபைலை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது எனில், அதற்கும் நெட்ஃப்ளிக்ஸ் ஒரு வசதியை வழங்குகிறது. ப்ரோஃபைலை லாக் செய்ய நான்கு இலக்க கடவுச்சொல் கொண்டு லாக் செய்ய முடியும். இதை செய்ய அக்கவுண்ட் பக்கத்தில் ப்ரோஃபைல் மற்றும் பேரண்டல் கண்ட்ரோல் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ப்ரோஃபைல் லாக் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

இதைத் தொடர்ந்து கடவுச்சொல் பதிவிட்டு சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், ப்ரோஃபைலை இயக்க ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் பதிவிட முடியும்.

நெட்ப்ளிக்சில் IMDB ரேட்டிங் 

நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் முன் IMDB ரேட்டிங் பார்க்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? இதை செய்ய குரோம் எக்ஸ்டென்ஷன் இருக்கிறது. 'என்ஹான்சர் ஃபார் நெட்ஃப்ளிக்ஸ்' எக்ஸ்டென்ஷன் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளுக்கு IMDB ரேட்டிங் பார்க்க முடியும். 

மொபைல் டேட்டா சேமிக்க

நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகளை வை-பை மூலம் பார்க்கும் போது இணைய இணைப்பு பற்றி எந்த கவலையும் இன்றி இருக்கலாம். மொபைல் டேட்டா பயன்படுத்தும் போது நெட்ப்ஃளிக்ஸ் அதிக டேட்டாவை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு செய்ய ஆப் 'செட்டிங்ஸ்' -- 'மொபைல் டேட்டா யூசேஜ்' ஆப்ஷன்களில் 'சேவ் டேட்டா யூசேஜ்' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். மேலும் நெட்ஃப்ளிக்ஸ் உங்கள் மொபைல் டேட்டா மூலம் தரவுகளை டவுன்லோட் செய்ய அனுமதிக்காமல், 'வை-பை ஒன்லி' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

click me!