சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A52s ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி A52s ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கேலக்ஸி A52s ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு 6GB+128GB மற்றும் 8GB+128GB என இரண்டு வேரியண்ட்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி A52s 6GB+128GB விலை ரூ. 35,999 இல் இருந்து தற்போது ரூ. 30,999 என மாறி இருக்கிறது. இதேபோன்று கேலக்ஸி A52s 8GB+128GB விலை ரூ. 37,499 இல் இருந்து ரூ. 32,499 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் வலைதளங்களில் ஸ்மார்ட்போனின் இரு வேரியண்ட்களும் பழைய விலையிலேயே பட்டியலிடப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி A52s அம்சங்கள்
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A52s மாடலில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டில்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் கொண்ட பன்ச் ஹோல் பேனல், மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் டிஸ்ப்ளேவில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 6GB+128GB மற்றும் 8GB+128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 4500mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் இரண்டு 5MP சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A52s ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி A53 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் காரணமாகவும் கேலக்ஸி A52s ஸ்மார்ட்போன் விலை தற்போது குறைக்கப்பட்டு இருக்கலாம்.